குழந்தைகளுக்கு ஒரு நாளில் எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்?

தாய்ப்பாலில் நீரை போன்று 85% நீர்ச்சத்து இருப்பதால் தனியாக குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது கிடையாது.

குழந்தைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை தண்ணீர் கொடுக்கலாம். சராசரியாக 60 மில்லி தண்ணீர் போதுமானது. குழந்தைகள் தண்ணீர் வேண்டும் என விரும்பினால் 100 மில்லி கூட கொடுக்கலாம். சில குழந்தைகள் தண்ணீர் குடிக்க விரும்பமாட்டார்கள் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

குழந்தைகள் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் அதனால் எவ்வித கெடுதலும் ஏற்படாது. ஏனென்றால் குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் பால், பழச்சாறு, கடைந்த மோர் அவற்றின் மூலம் அவர்களுக்கு தேவைப்படும் தண்ணீர் கிடைத்து விடுகிறது.

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும். கோடைகாலங்களில் வியர்வை அதிகம் ஏற்படும். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அதிக தண்ணீர் கொடுக்க வேண்டும்.

கீழ்காணும் வயதுடையவர்களுக்கு அவர்கள் தினசரி குறைந்தபட்சம் குடிக்க வேண்டிய நீரின் அளவு இது:

1 முதல் 3 வயது வரை – 4 டம்ளர்கள்
4 முதல் 8 வயது வரை – 5 டம்ளர்கள்
9முதல் 13 வயது வரை – ஆண் 8 டம்ளர்கள், பெண் 7 டம்ளர்கள்
11முதல் 18 வயது வரை – ஆண் 11 டம்ளர்கள், பெண் – 8 டம்ளர்கள்

Recent Post