Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

தலைக்கு எண்ணெய் வைத்தால் நல்லதா..? கெட்டதா..?

மருத்துவ குறிப்புகள்

தலைக்கு எண்ணெய் வைத்தால் நல்லதா..? கெட்டதா..?

முன்னுரை:-

தலைக்கு எண்ணெய் வைத்தால், அது நல்ல விளைவுகளை ஏற்படுத்துமா..? அல்லது தீய விளைவுகளை ஏற்படுத்துமா..? இந்த கட்டுரையில் விளக்கமாக பார்க்கலாம்.

விளக்கம்:-

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால், தலை முடிக்கொட்டாது என்று சிலர் கூறுவார்கள். ஒரு சிலர் எண்ணெய் தேய்ப்பதால் தான் முடிக்கொட்டுகிறது என்று கூறுவார்கள். ஆனால், உண்மையில் சொல்லப்போனால், எண்ணெய் வைக்கும் முறையை தான் மாற்ற வேண்டும் என்று பலருக்கும் தெரிவதி;ல்லை.

எண்ணெய் வைக்கும் முறைகள்:-

1. தலைக்கு அதிக அளவில் எண்ணெயை வைக்கக் கூடாது. இவ்வாறு எண்ணெய் வைத்தால், அது தலைமுடியின் வேர்களில் நிரம்பிவிடும். இப்படி செய்வதன் மூலம், முடிக்கு சீரான வளர்ச்சிக் கிடைக்காமல் முடி கொட்டிவிடும்.

2. எண்ணெய் தலைக்கு தேய்த்தால் ஒரு சிலர் ஒரு வாரத்திற்கும் மேல், தலைக்கு குழிக்க மாட்டார்கள். ஏன் என்று கேட்டால் சளி பிடிக்கும் என்று கூறுவார்கள். ஆனால், அவ்வாறு தலைக்கு எண்ணெய் தேய்த்தால், 2 நாட்களுக்குள் குழித்துவிட வேண்டும். இல்லையென்றால், முடிக்கொட்டும் அபாயம் இருக்கிறது.

3. குளிப்பதற்கு 2 மணி நேரம் முன்பே தலையில் எண்ணெயை ஊற வைக்க வேண்டும். அப்போது தான் அது நன்றாக வேர்களில் ஊடுருவும்.

4. சிலர் தலை முடியில் உள்ள சிக்கல்களை எடுப்பதற்காகவே, எண்ணெயை வைத்து எடுப்பார்கள். ஆனால், இப்படி செய்தால் அது இன்னும் ஆபத்தாக முடியும். சிக்கல் எடுத்த பிறகு தான், முடியில் எண்ணெயை தடவ வேண்டும்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top