முன்னுரை:-
சிறந்த தம்பதிகளாக விளங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கட்டூரை படிக்க வந்தவர்களுக்கு வணக்கம். உங்களுக்கான முக்கியமான டிப்ஸ்கள் என்னவென்று தற்போது பார்க்கலாம்.
விளக்கம்:-
இன்றை கால கட்டத்தில் இருக்கும் தம்பதிகள் சிறு சிறு பிரச்சனைகளுக்கும் விவாகரத்து வரை செல்லும் சூழ்நிலை நிறைந்து இருக்கிறது. கிரிமினல் வக்கீல்களை விட, விவாகரத்து வாங்கித் தரும் வக்கீல்களே அதிகமாக சம்பாதிக்கும் சூழ்நிலை இருக்கிறது. இவ்வாறு இருக்கும் இந்த நிலையில், சிறந்த தம்பதிகளாக விளங்குவதற்கான 5 முக்கிய டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.
அந்த 5 டிப்ஸ்கள்:-
நேரம் ஒதுக்குதல்
பாராட்டுதல்
மாற்ற நினைக்காதீர்கள்
மரியாதை
உரையாடல்
நேரம் ஒதுக்குதல்:-
இன்றை காலகட்டத்தில், கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால், ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்க கூட முடியாத சூழ்நிலை இருக்கிறது. இதனை மாற்ற வேண்டும். எவ்வளவு வேலை இருந்தாலும், தங்களது துணைக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது முக்கியம்.
பாராட்டுதல்:-
உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் பிடித்தமான ஒரு விஷயம் என்றால் அது பாராட்டு தான். பாராட்டை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம்.
துணைகள் செய்யும் சிறு சிறு விஷயங்களை பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள். அந்த விஷயத்தின் மீது பெரிய ஈர்ப்பு இல்லையென்றாலும் பாராட்ட மறக்காதீர்கள். அந்த நேரத்தில், பெரிய விமர்சகர் மாதிரி உங்கள் கருத்தை கூறி துணையை நோகடித்துவிடாதீர்கள்.
மாற்ற நினைக்காதீர்கள்:-
உங்களது துணை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அப்படியே இருக்க வையுங்கள். உங்களுக்காகவே, உங்கள் குடும்பத்தினருக்காவோ மாற வைக்காதீர்கள்.
மரியாதை:-
அவர்கள் உங்களது துணையாக இருக்கலாம், உங்களில் பாதியாக கூட இருக்கலாம். இருப்பினும், அவரும் ஒரு தனி மனிதன் தான். அவர்களுக்கும் சுயமரியாதை என்ற விஷயம் இருக்கும். அதனால், அவர்களுக்கான மரியாதையை எல்லா இடங்களிலும் கொடுத்து விடுங்கள்.
உரையாடல்:-
சிறந்த தம்பதிகளாக விளங்க முக்கியமான ஒன்று, உரையாடுவது தான். உரையாடல் நிற்கும்போது தான் பெரும்பாலான உறவுகள் பலம் அற்றதாக மாறிவிடுகிறது.
சிலர் நினைக்கலாம், உரையாடல் நின்றுவிட்டால் காதல் போய்விடுமா..? அப்படி போய்விட்டால் அது காதல் இல்லை என்று..? இவையெல்லாம் நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராது.
அதுமட்டுமின்றி, இவையெல்லாம் உரையாடலை தவிர்ப்பதற்காக சொல்லும் காரணங்களே தவிர உண்மை அது கிடையாது. எனவே உங்களது துணையுடன் உரையாடலை தொடர்ந்து வைத்திருங்கள்.