‘அந்த’ நேரத்தில் தம்பதிகள் தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்..!

முன்னுரை:-

தம்பதிகள் தனிமையில் இருக்கும்போது தவிர்க்க வேண்டிய முக்கியமான 5 விஷயங்களை பற்றி தற்போது பார்க்கலாம். ( பின்குறிப்பு: பொது நலன் கருதி, குறிப்பிட்ட சில விஷயங்களை மறைமுகமாக கூறியிருக்கிறோம். )

விளக்கம்:-

இன்றைய காலகட்டத்தில் நிறைய தம்பதிகள் விவாகரத்து பெற்று வருகின்றனர். இதற்கான முக்கியமான காரணமாக, தாம்பத்தியத்தில் இருக்கும் பிரச்சனைகளாக தான இருக்கும். எனவே இவற்றை தவிர்க்க, இந்த 5 முக்கியமான விஷயங்களை செய்யாதீர்கள்..

அந்த முக்கியமான 5 விஷயங்கள்..!

1. வெட்கம் வேண்டாம்

2. பொய்யான நடிப்பு

3. சுயநலம்

4. அமைதி

5. செல்போன்

வெட்கம் வேண்டாம்:-

தம்பதிகள் பெரும்பாலும், வெட்கம் கொண்டவர்களாக இருப்பது சகஜம் தான். ஆனால், அந்த நேரத்தில் வெட்கத்திற்கு சற்று விடுமுறை அளித்து விடுங்கள். அப்போது தான் இல்லற வாழ்க்கை நல்லதாக இருக்கும்.

பொய்யாக நடித்தல்:-

அந்த நேரத்தில் பொய்யான நடிப்புகளை சற்று ஓரங்கட்டி வைத்து விடுங்கள். நீங்கள், உங்கள் துணைக்கு ஈர்ப்பு ஏற்படுத்த, முனகும் சத்தங்கள், பொய்யாக செய்தால், அலுப்பு ஏற்பட்டுவிடும். அதன்பிறகு அதில் ஒரு கிக்கும் இல்லாமல் போய்விடும்.

சுயநலம்:-

அனைத்திலும் சுயநலமாக இருப்பவர்களாக இருந்தாலும், அந்த நேரத்தில் உங்கள் சுயநலத்தை தூக்கி எறிந்துவிடுங்கள். தான் மட்டும் தான் அத்தனை இன்பத்தையும் அனுபவிப்பேன் என்று கூறினால், அது வெறுப்பையே துணைக்கு ஏற்படுத்தும்.

அமைதி:-

அந்த நேரத்தில் அமைதியாகவும் இருந்துவிடாதீர்கள். உங்களின் வசீகரமான சத்தங்கள் சில, துணையை வெகுவாக ஈர்க்கவும் செய்யும் திறன் படைத்தவை.

வெளியில் ஆட்கள் இருக்கிறார்கள் என்றால் அமைதியாக இருப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால், எந்த பிரச்சனையும் இல்லையென்றால், உங்கள் துணையோடு அமைதியாக இருக்காதீர்கள். சில வசீகரமான முனகல்களை எழுப்புங்கள்.

செல்போன்:-

அந்த நேரத்தில் தவிர்க்க வேண்டிய மிகவும் முக்கியமான விஷயத்தில் ஒன்று செல்போன். அந்த நேரத்தில் செல்போனை தவிர்த்து விடுங்கள். தொடர்ந்து அழைப்புகள் வந்தால், அது துணையை எரிச்சலடைய செய்யும்.

Recent Post

RELATED POST