உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டுமா? இதை சாப்பிட்டாலே போதும்..!

நாம் சாப்பிடும் உணவுகள் நன்றாக செரிமானம் ஆக வேண்டும். சரியாக செரிமானம் ஆகாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு பிரச்சனை ஏற்படும்.

நாம் அன்றாடம் உண்ணும் உணவு மூலம் அந்த நச்சுகளை மிக எளிதாக அகற்றிவிடலாம். உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற என்ன மாதிரியான பழங்களை எடுத்துக்கொள்ளலாம் என இங்கு பார்ப்போம்.

மாதுளை சாற்றினை அடிக்கடி குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும். மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆப்பிளில் உள்ள சத்துக்கள் செரிமானத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உடலுக்கு முழுமையாக கிடைக்கும். ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது.

இதையும் படிக்கவும் : இந்த உணவுகள் கடுமையான மலச்சிக்கலை ஏற்படுத்தும்.ஜாக்கிரதை..!

இஞ்சியை மையாக அரைத்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும்.

தினமும் இரண்டு, மூன்று பூண்டு பற்களைச் சாப்பிட்டுவந்தால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறும். உடலில் தங்கியிருக்கும் நச்சுகளை முற்றிலுமாக வெளியேற்றும்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சைப் பழத்தின் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் கழிவுகள் வெளியேறும்.

Recent Post

RELATED POST