சில வருடங்களுக்கு முன்பு, சர்க்கரை நோய் என்பது பணக்காரர்களுக்கு வரக்கூடிய நோய் என்று தான் சொல்வார்கள். ஆனால், இன்றை நாட்களில் அனைவருக்கு இந்த நோய் வருகிறது. அவ்வளவு ஏன், பிறந்த குழந்தைகளுக்கும் கூட இந்நோய் வருகிறது. சரி அதை விடுங்க, சர்க்கரையின் அளவை குறகை;க உதவும் உணவு வகைகள் பற்றி தற்போது பார்ப்போம்.
சர்க்கரை அளவை குறைக்கும் உணவுகள்:-
- பூசனிக்காய்
- கடல் சார் உணவுகள்
- முட்டை
- நட்ஸ்
பூசனிக்காய்:-
பூசனிக்காய் என்பது அதிகப்படியான சத்துகள் நிறைந்தது ஆகும். இதுமட்டுமின்றி, நார்ச்சத்துகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்ல பயனை தரும்.
கடல் சார் உணவுகள்:-
கடல் சார் உணவுகளான மீன் போன்றவற்றில், புரதம், நல்ல கொழுப்புகள் இருக்கிறது. இது சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்.
முட்டை:-
ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின்கள், புரோட்டீன் சத்து மிக்க முட்டையை தினசரி ஒன்று என சாப்பிட்டு வர சர்க்கரை அளவு குறையும். இது ஃபுட் அண்ட் ஃபங்ஷன் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வாகும்.
நட்ஸ்:-
நட்ஸ் வகைகளில் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன்கள் இருக்கிறது. இந்த வகை உணவுகளை, கைப்பிடி அளவு தினமும் எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவு குறையும்.