பார்சுவ கோணாசனம் பயன்கள் என்ன?

உடலும் மனமும் இணைந்து செயல்படும்போதுதான் எந்த செயலும் முழுமையாக வெற்றி பெறும். இவ்வாறு உடலும் மனமும் சோர்ந்து விட்டாள் தேவையில்லாத மன நோய்களுக்கு ஆளகிறோம், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக சித்தர்கள் உருவாக்கப்பட்டது. ஆசனங்கள் அந்த வகையில் பார்சுவ கோணாசனம் பற்றி பார்ப்போம்.

பார்சுவ கோணாசனம் என்றால் என்ன

பாசுப என்றால் பக்கவாட்டு என்ற பொருளில் வலது மற்றும் இடது உடல் பாகங்களுக்கு முக்கியத்துவம் தருவதால் இதற்கு பார்சுவ கோணாசனம் என்று பெயரிடப்பட்டுள்ளது

பார்சுவ கோணாசனம் செய்யும் முறை

  1. இரண்டு கால்களையும் பக்கவாட்டில் அகட்டி வைக்க வேண்டும்
  2. இரண்டு பகுதிகளுக்கு இடையே உள்ள தூரம் நம் உயரத்தில் மூன்றில் இரண்டு பங்கு இருக்க வேண்டும்
  3. பின்பு வலது பாதத்தை 90 டிகிரி குணத்திற்கு வலது பக்கமாக திருப்ப வேண்டும்
  4. அச்சமயத்தில் மூச்சை வெளியே விட்டுக் கொண்டே வலது காலை மடக்கவும்
  5. பின்பு வலது உள்ளங்கையை வலது பக்கத்திற்கு அருகே தரையில் பதிக்கவும்
  6. பிறகு இடது கையை தலைக்கு மேல் இடது காதை ஒட்டியவாறு நீட்டவும்
  7. இந்த நிலையில் பார்க்கும்போது வலது காலின் கீழ் பகுதி அதாவது மூட்டு வரை தரைக்கு செங்குத்தாகவும் வலது தொடை பகுதி தரைக்கு இணையாக கீழ்மட்டத்தில் இருக்க வேண்டும்
  8. இடது கால் வளையாமல் நேராகவும் பாதம் நன்றாக தரையில் பதிந்தும் இருக்கவேண்டும்
  9. வலது உள்ளங்கை யையும் இரு தோள்களும் ஒரே நேர்கோட்டு தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டும்
  10. இடது கால் பாதம் முதல் கைவிரல் நுனி வரை ஒரே நேர்கோட்டில் இருப்பதற்கு உடலின் இடது பக்கத்தை நன்கு நீட்டவும் உடலின் பக்கவாட்டு தோற்றம் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்
  11. முப்பது வினாடிகள் கழித்து மூச்சை உள் இழுத்து கொண்டு நேராக நிமிர்ந்து நிற்கவும் பிறகு மேலே செய்ததுபோல மூச்சை வெளியே விட்டுக் கொண்டே இடது பக்கமும் செய்யவும்

பார்சுவ கோணாசனம் பயன்கள் என்ன?

  1. உடலின் இடது மற்றும் வலது பக்கத்தில் ஏற்படும் அதிக தாக்கத்தை குறைக்கிறது
  2. மார்பை விரிவாக்கி ஆழ்ந்த நீண்ட மூச்சுக்கு வழி செய்கிறது
  3. மூச்சுக்குழல் மற்றும் நுரையீரலில் ஏற்படும் நோய்களை நீக்குகிறது
  4. மலட்டுத்தன்மையை நீக்குகிறது
  5. கல்லீரலில் படியும் கொழுப்பை குறைக்கிறது
  6. கணைய சுரப்பை சரி செய்து மதுமேக நோயை வரவிடாமல் செய்கிறது
  7. இடுப்பு பகுதியில் மற்றும் முதுகு பகுதியில் ஏற்படும் தசை பிடிப்பு சரி செய்கிறது
  8. மார்பு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது
  9. தொடைப் பகுதியை வன்மை அடைய செய்கிறது
  10. கை மற்றும் கால் பகுதிகளில் வன்மை அடைய செய்கிறது
  11. தோல் மீட்புப் பகுதிகளில் ஏற்படும் குறைபாடுகளை நீக்குகிறது
  12. நரம்பு மண்டலங்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது.

Recent Post

RELATED POST