பெண்களே உடல் எடை குறையனுமா..? ஜிம் வேண்டாம்.. இதுவே போதும்..

முன்னுரை:-

உடல் எடையை குறைப்பதற்கு ஜிம்முக்கு செல்லும் பெண்களுக்கு தேவையான அறிவுரைகளை இந்த கட்டூரையில் நாம் தெளிவாக பார்க்கலாம்.

விளக்கம்:-

உணவுகள் சாப்பிடுவதில் கவனமின்மை, சரியான தூக்க விகிதம் இல்லாமை, உட்கார்ந்தே வேலை செய்தல் போன்ற காரணங்களுக்காக உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

உடல் எடை அதிகரித்தல், இளம் வயதில் சாதாரண விஷயமாக இருந்தாலும், வயதாக வயதாக அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

பெரும்பாலும், பெண்கள் ஜிம்முக்கு சென்று உடல் எடையை குறைக்க நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் சாதாரணமாக வீட்டிலேயே செய்யும் வேலைகள் எத்தகைய பயனை தருகிறது என்று பார்ப்போம்.

வீட்டு வேலைகள்:-

1. பெண்கள் அரை மணி நேரம் சமையல் செய்யும் வேலைகளை செய்தால், அது நம் உடலில் இருக்கும் 92 கலோரிகளை எரித்து விடும்.

2. பெண்கள் அரை மணி நேரம் துணி துவைக்கும் வேலையில் ஈடுபட்டால், 133 கலோரிகள் மிகவும் சாதாரணமாக எரிக்கப்பட்டுவிடும்.

3. சாதாரணமாக நடைபயிற்சி செய்வது என்று இல்லாமல், வீட்டில் வளர்க்கும் நாயுடன் நடைபயிற்சி செய்தால், 150 கலோரிகள் வரை எரிக்கப்படும்.

4. வீட்டில் கார் இருந்தால், அதனை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யுங்கள். இவ்வாறு அரை மணி நேரம் செய்வதன் மூலம், 167 கலோரிகள் எரிக்கப்பட்டுவிடும்.

முடிவுரை:-

இவ்வாறு பெண்கள் செய்வதன் மூலம், விரைவில் கலோரிகள் எரிக்கப்படும். இந்த வேலைகளை ஆண்கள் செய்தாலும், அவர்களுக்கும் நல்ல பயனை உடல் எடை குறைப்பில் ஏற்படும்.

Recent Post

RELATED POST