உடையாத நகங்கள் வேண்டுமா..? அப்ப இது உங்களுக்கு தான்..!

முன்னுரை:-

அழகாகவும், ஆரோக்கியமாகவும், நீளமாகவும் நகங்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்றும், அதற்கான வீட்டுக் குறிப்புகள் பற்றியும் தற்போது பார்க்கலாம்.

அழகை பராமரிக்கும் விஷயத்திற்கு எப்போதும் ஆண்கள் தான் முன்னுரிமை அளிப்பார்கள். ஆனால், நகம் வளர்ப்பது போன்ற சில விஷயங்கள் மட்டும் பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கு பிடிக்கும். அப்படிப்பட்ட நகத்தை வளர்க்க சில எளிய வீட்டுக் குறிப்புகள் உள்ளன.

அதில் முக்கிய இடம் பிடித்தவை இதோ..

1. ஆலிவ் எண்ணெய்

2. பூண்டு

3. எலுசிச்சை சாறு

ஆலிவ் எண்ணெய் :-

ஆலிவ் எண்ணெயை சிறிய பாத்திரம் ஒன்றில் வைத்து சூடக்குங்கள். பிறகு அந்த எண்ணெய் வெதுவெதுப்பானதும், சூட்டை தாங்கும் அளவிற்கு வந்ததும் அந்த எண்ணெயின் உள்ளே விரலை விடுங்கள்.

சிறிது நேரம் அப்படியே விரலை வைத்திருங்கள். பிறகு, எண்ணெயை கழுவி விடுங்கள். இதுபோன்று செய்தால், நகங்கள் உடையாமல் ஆரோக்கியமாக வளரும்.

பூண்டு:-

பூண்டு என்பது மிகவம் மருத்துவ குணம் வாய்ந்த ஒரு உணவுப் பொருள் ஆகும். இந்த பொருளை நகங்களின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம்.

அதாவது, பூண்டை மைய அரைத்து, அதை விரல்களின் உள்ளே மற்றும் வெளியே தடவ வேண்டும். இவ்வாறு செய்தாலும் நகங்கள் ஆரோக்கியமானதாக இருக்கும்.

எலுமிச்சை சாறு:-

வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் அருமருந்து என்றால் அது எலுமிச்சைப் பழம் தான். இந்த பழத்தின் நல்லதொரு கிருமிநாசினியாகவும் பயன்படும்.

இந்த சாற்றை பிழிந்து ஒரு கின்னத்தில் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதனுள் தங்களது விரலை விட்டு  மூழ்கும் படி செய்ய வேண்டும். பின்னர் எலுமிச்சையின் தோலை நகங்களை சுற்றி தேய்க்கவும். இவ்வாறு செய்தால் நகங்கள் அழகாக வளரும்.

Recent Post