நட்பை நீண்ட நாள் தொடர சில டிப்ஸ்..!

முன்னுரை:-

நீண்ட நாட்களாக நண்பர்களாக இருப்பவர்களின் நட்பை, எப்போது எப்படி தொடர்வது என்று இந்த கட்டூரை தொகுப்பில் பார்க்கலாம்.

விளக்கம்:-

உலகத்திலேயே இரண்டு உறவுகளை மட்டும் தான் நம்மால் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். ஒன்று காதல், இன்னொன்று நட்பு. அவ்வளவு ஸ்பெஷலானது நட்பு நம் அனைவருக்கும். நல்ல நண்பர்கள் இருந்தால், எவ்வளவு பெரிய சாதனையையும் படைக்க முடியும். அப்படிப்பட்ட நண்பர்கள் நாம் வாழ்க்கை முழுவதும் பயணிப்பதற்கான சில டிப்ஸ்களை தற்போது பார்க்கலாம்.

டிப்ஸ்:-

1. வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக ஊடகங்கள் வழியாக தொடர்பில் இருங்கள்.

2. திருமணம், பிறந்த நாள், அவர்களது வீட்டு விசேஷங்கள் போன்ற நாட்களின்போது, அவர்களுக்கு நேரில் சென்று வாழ்த்துகளை பகிருங்கள். நேரில் செல்ல முடியாத அளவிற்கு தூரமாக இருந்தால், சமூக வலைதளங்கள் மூலமாகவாவது வாழ்த்து கூறுங்கள்.

3. எப்போதாவது, நமது கேலரியை திறந்து பார்க்கும்போது, நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தென்பட்டால், அவற்றை நண்பருக்கு அனுப்புங்கள். பழைய நினைவுகள் பற்றி அசைப்போடுங்கள்.

4. எப்போதாவது, நண்பர்கள் ஒன்றாக ஒரு இடத்தில் ஒன்று சேர முயற்சி செய்யுங்கள். இதுவும் நட்பை நீண்ட நாட்களுக்கு தொடர செய்ய உதவும்.