மழைக்காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

சீதோஷண நிலைக்கு ஏற்ப உணவுப்பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு குடிநீர் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

குடிநீரை கொதிக்கவைத்து பருகுவது நல்லது. சூடான சூப்கள், இஞ்சி டீ, மூலிகை டீ, மசாலா சேர்க்கப்பட்ட குழம்பு வகைகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் உடனே துணிகளை மற்ற வேண்டும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும் உணவுகளை கொடுக்க வேண்டும்.

குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.

பாலூட்டும் தாய்மார்கள் பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்ச்சத்து மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும்.

உணவை மிகவும் குளிர்ச்சியாகவோ, சூடாகவோ கொடுக்கக் கூடாது. மிதமான நிலையில் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்குக் கொடுக்கும் பழங்களைச் சுடுநீரில் சுத்தமாகக் கழுவி கொடுக்க வேண்டும். ஃப்ரிஜில் வைக்கப்பட்ட உணவுகளைக் கொடுக்கவே கூடாது.

Recent Post

RELATED POST