கோபத்தை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும், கோபத்தின் அடிப்படை புரிதல்கள் பற்றியும் இந்த கட்டுரையில் விரிவாக படிக்கலாம்.
கோபம்:
கோபம் என்பது இரண்டு பக்கமும் கூர்மையாக உள்ள ஒரு ஆயுதம் என்று தான் சொல்ல வேண்டும். அதனை சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான அளவு, தகுந்த காரணங்களுக்காக வெளிப்படுத்தும் போது மட்டுமே நல்ல விளைவுகளை தரும் என்பது நியதி.
தேவையில்லாத காரணங்களுக்காக நாம் கொள்ளும் கோபம், சமுதாயத்தில் நமக்கான மரியாதையை குறைத்துவிடும், நம் உடல் நலத்தை பாதித்துவிடும், நம்மை உதாசிண்படுத்த துவங்குவார்கள். சரி கோபத்தை காட்டாமலே இருப்போம் என்று இருந்தாலும், அது உடல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை மனிதனுக்கு தரும். எனவே கோபத்தை எப்படி சமாளிப்பது என்று சில டிப்ஸ்களை தற்போது பார்ப்போம்.
கோபத்தை சமாளிக்கும் சில டிப்ஸ்:
- ஒருவரிடம் ஒரு விஷயம் பற்றி பேசுவதற்கு முன் நன்றாக யோசியுங்கள்.
- யார் மீதாவது கோபத்தை காட்டுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டால், உடனே அதனை வெளிப்படுத்தாதீர்கள். சிறிது நேரம் அமைதியாக இருந்து பாருங்கள். அதன்பிறகும், கோபம் வருவதற்கான சரியான இருந்தால், கோபம் கொள்ளுங்கள்.
- யார் எந்த விஷயத்தின் மீது கோபம் கொண்டாலும், அதற்கு ஒரு பிரச்சனை தான் காரணமாக இருக்கும். கோபத்திற்கான பிரச்சனை என்ன என்பதை கண்டறிந்து, அதனை நீக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். பிரச்சனை ஏற்பட்டுவிட்டது என்றே மனதை வைத்துக் கொள்ளாதீர்கள்.
- உங்கள் ஆதங்கத்தை பிரச்சனைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு நண்பரிடம் கொட்டி தீர்த்து கொள்ளுங்கள்.
- ஆழ்ந்த சுவாசம் போன்ற தளர்வு நுட்பங்களை பயிற்சி செய்யுங்கள்.
கோபம் கொள்ளாமல் இருந்து விடாதீர்கள். உங்களை பொம்மை என்று நினைத்து விடுவார்கள். கோபத்தை சரியான நேரத்தில் வெளிப்படுத்தி, சிறிய அளவில் சீற மட்டுமே செய்யுங்கள். அதுவே போதுமானது. எந்த ஒரு கோபத்திலும் நியாயம் இருக்க வேண்டும் என்பதே நியதி.