ஆளி விதைகளில் நமது உடலுக்கு தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை இதில் அதிக அளவில் உள்ளது. சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளவும், சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் ஆளி விதைகள் உதவுகின்றன.
ஆளி விதையோடு தேன்
ஆளி விதையோடு தேன் கலந்து மாஸ்க் போடுவதால் சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும். இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை இதில் பார்ப்போம்.
ஒரு டீஸ்பூன் ஆளி விதையை எடுத்து நன்றாக பொடி செய்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் தயிர் கலந்து நன்றாக பேஸ்ட் செய்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் சருமத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் கழுவவும்.
வாரத்துக்கு இரு முறை இவ்வாறு செய்து வர சரும பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ஆளி விதை மற்றும் மஞ்சள்
ஆளிவிதை பொடியுடன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையுடன் தேன் சேர்த்து பேஸ்ட் மாதிரி தயார் செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் ஃபேஸ் மாஸ்காக அப்ளை செய்து சிறிது நேரம் அப்படியே விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவிக்கொள்ளவும். வாரம் ஒரு முறை இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம்.