கீரையை எப்படி பயன்படுத்துவது?

ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் கீரைகளை தேர்வு செய்யவும். கீரைகள் புதிதாக இருக்க வேண்டும். எனவே வீட்டில் தொட்டிகளில் சிறு வகை கீரைகளை வளர்த்தால் புதிய கீரை கிடைக்கும்.

கீரை வாடி வதங்கி இருக்கக் கூடாது. பூச்சிகள் கீரையை தவிர்க்க வேண்டும்

கீரை வாங்கியதும் அதனை பிரித்து ஒரு வாளியில் போட்டு 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு அதை அலசினால் அதில் உள்ள மண் அகன்று விடும். இதனால் பூச்சிக்கொல்லியின் வீரியம் குறைந்துவிடும். இதனை நன்றாக கழுவுவதால் சுத்தமான கீரை நமக்கு கிடைக்கும்.

கீரை கழுவிய பிறகு நறுக்க வேண்டும். நறுக்கிய பிறகு கழுவக் கூடாது. கழுவினால் அதில் உள்ள தாது உப்புக்கள் போய்விடும்.

கீரைகளை வேக வைக்க சிறிதளவு தண்ணீர் ஊற்றினாலே போதும் நீண்ட நேரம் வேக வைக்கக்கூடாது அதேபோல் நீண்ட நேரம் பொரிக்கவோ வதக்கவோ கூடாது

கீரையில் மஞ்சள்தூள், உப்பு போட்டு வேகவைக்கும் போது அதனை மூடி போட்டு மூட வேண்டும். கீரையை இரவில் சாப்பிட்டால் அது ஜீரணமாக நீண்ட நேரம் ஆகும் எனவே இரவு நேரங்களில் கீரையை தவிர்ப்பது நல்லது.

மற்றபடி கீரையை வருடம் முழுவதும் தொடர்ந்து சாப்பிடலாம்.

Recent Post

RELATED POST