இறைவனை வணங்குவது எப்படி?

கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்குவதிலும் பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

முதலில் இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து வணங்க வேண்டும். கொடிமரத்தின் பக்கத்தில் சென்று கொடிமரத்திற்கு வலப்பக்கத்தில் தரையில் விழுந்து அங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

பிரகாரங்களை வலம் வரவேண்டும். பலிபீடத்தின் அருகில் சென்று நம்மிடம் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாத்சர்யம் என்னும் ஆறு கெட்ட குணங்களையும் பலி கொடுத்ததாக உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கன்னி மூலையில் உள்ள விநாயகரை வணங்க வேண்டும்.

விநாயகர் முன் தோப்புக் கரணம் போட்டு வணங்க வேண்டும்.

துவாரபாலக விக்கிரகங்களின் முன் சென்று இறைவனை தரிசித்திட அனுமதி செய்துதருளுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

மூலஸ்தான மூர்த்தியை வணங்க வேண்டும்.

அம்பாள் சன்னதியில் வழங்க வேண்டும்.

உட்பிரகாரத்தில் உள்ள மூர்த்திகளை வணங்கி வலம் வர வேண்டும்.

தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்.

முருகப் பெருமானை வணங்க வேண்டும்.

சண்டேஸ்வரர் சன்னதியை அடைந்து, சிவ தியானத்தில் அவர் இருப்பதால் அவர்களுக்கு மூன்று முறை கை கொட்டி அவர் நம்மை பார்ப்பதாக கருதி, சிவதரிசன பலன் தருமாறு பிரார்த்திக்க வேண்டும்.

நடராஜ பெருமான் துர்க்காம்பிகை பைரவர் மற்றும் நவக்கிரகங்களை வணங்க வேண்டும். மறுபடியும் கொடி மரத்தின் இடப்பக்கம் நின்று உள்ளே உள்ள மூர்த்திக்கு உரிய மூல மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

தெய்வங்களை வணங்கிய பின்னர் வீட்டிற்கு செல்லும்போது கூடியவரை முதுகுப்பக்கம் காட்டாமல் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

Recent Post

RELATED POST