சுடு நீரை அளவுக்கு மீறி குடிப்பதால் ஏற்படும் சிக்கல்கள்

உடல் எடையை குறைப்பதற்கு சிலர் சூடான நீரை குடிப்பார்கள். சுடு நீரை அளவுக்கு மீறி குடிப்பதால் சில சமயங்களில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

காலையில் எழுந்தவுடன் சூடான நீரை குடிப்பதால் எந்த தீங்கும் இல்லை. ஆனால் ஒரு நாளைக்கு பல முறை சூடான நீரை குடித்தால் உங்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிக சூடான நீர் குடல்களை சேதப்படுத்தும். இதனால் செரிமான சக்தி பாதிக்கப்படும்.

காலையில் எழுந்த பிறகு லேசான சூடான நீரை குடிக்கலாம். மீண்டும் மீண்டும் சூடான நீரில் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதைப்போல இரவு நேரங்களில் சுடுநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இரவில் தூங்கும் போது வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் தூக்கத்தை கெடுக்கும். மேலும் இது உங்கள ரத்தநாள செல்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் மட்டும் வெதுவெதுப்பான நீரை அருந்தலாம்.

Recent Post