‘கல்யாணம் பண்ண எனக்கு பொண்ணு வேணும்’…பாஜக எம்எல்ஏவுக்கு ஷாக் கொடுத்த நபர்

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ பிரஜ்பூஷண் ராஜ்புத் என்பவர் மஹோபா மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், தனது காருக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் தான் திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் பார்த்துத் தரும்படி கேட்டுள்ளார்.

 ‘இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?’ என்று பாஜக எம்எல்ஏ கேட்டுள்ளார். அதற்கு அந்த ஊழியர், ‘நான் உங்களுக்கு வாக்களித்தேன், அதனால்தான் நீங்கள் வெற்றி பெற்றுளீர்கள். எனவே, நீங்கள்தான் எனக்கு திருமணம் நடத்திவைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். 

உங்களுக்கு பொருத்தமான பெண்ணைத் தேடுகிறேன்’ என்று ஊழியரிடம் உறுதியளித்துள்ளார். உங்களுக்கான பெண் உங்களைத் தேடி வருவாள்’ என்று எம்எல்ஏ கூறியுள்ளார். எம்எல்ஏவும் ஊழியரும் பேசும் இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Recent Post

RELATED POST