சுவையான இடியாப்பம் பிரியாணி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

உதிர்த்த இடியாப்பம்: 10

லவங்கப் பட்டை, ஏலக்காய், கிராம்பு தலா: 1

வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு: 2

காலிஃப்ளவர்: ஒரு கப்

இஞ்சி பூண்டு விழுது: 1 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயம்: 1

பொடியாக நறுக்கிய தக்காளி: 2

துருவிய கேரட்: 1

மிளகாய்த்தூள்: 1 டீஸ்பூன்

தனியாத்தூள்: அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள்: அரை டீஸ்பூன்

கரம் மசாலா பொடி:அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணெய், புதினா தேவைக்கேற்ப

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்து, பிறகு இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.

அதன் பின் உருளைக்கிழங்கு, கேரட், காலிஃப்ளவர் ஆகியவற்றை ஒன்றாக போட்டு வதக்கவும். இதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி கொத்துமல்லி புதினா சேர்க்கவும். கலவை கிரேவி பதத்திற்கு வந்த உடன் உதித்து வைத்திருக்கும் இடியாப்பத்தை சேர்த்து கிளறி சூடாக பரிமாறலாம்.

காய்கறிகளுக்கு பதில் பொடியாக நறுக்கிய சிக்கன் துண்டுகளையும் சேர்த்து செய்யலாம்.