தினமும் 4 இட்லி சாப்புடுங்க… அப்புறம் பாருங்க! – வியக்கவைக்கும் உண்மை

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் இட்லியும் ஒன்று. பொதுவாக இட்லியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துக் காலத்திலும் சாப்பிடக் கூடிய ஒன்றாக உள்ளது.

இட்லியில் 60 – 70 கலோரிகள், 2 கிராம் புரதம், 8 கிராம் கார்போஹைட்ரேட், 2 கிராம் நார்ச்சத்து, 1 மில்லி கிராம் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ ஆகியன உள்ளன. இதனை தின்தோறும் சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

தினமும் 4 இட்லி சாப்பிட்டு வந்தால் 300 முதல் 350 வரை கலோரிகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது. மேலும், இட்லியுடன் சாம்பார், சட்னி சேர்த்து உட்கொள்வதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சரியான அளவில் கிடைக்கிறது.

இட்லி சாப்பிடுவதனால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • நமது உடலில் இரத்தத்தை உற்பத்தி செய்வதற்கு இட்லி உதவுகிறது.
  • நமது உடலுக்குத் தேவையான சத்துக்களையும், உடலியல் உள்ள தசைகள் வலிமையாக வைக்க உதவுகிறது
  • மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கிறது.
  • வாய்வுக்கோளாறு இருப்பவர்கள் தினந்தோறும் இட்லி சாப்பிடுவது மிகவும் நல்லது.
  • வயிற்றில் புண்கள் இருந்தால் அதனை சரிசெய்யும் மேலும் நன்றாக செரிமான ஆக இட்லி மிகவும் உதவுகிறது.
  • பச்சிஇளம் குழந்தைகளுக்கு கூட வீட்டில் சமைத்த இட்லியை கொடுக்கலாம்.
  • இட்லி நாம் சாப்பிட்டு 2 மணி நேரத்தில் செரிமானம் ஆகிவிடும்.

Recent Post

RELATED POST