இலுப்பை மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும். இலுப்பை எண்ணெய் ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது. இலுப்பை மரத்தின் இலைகள் அதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களிலும் மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளன.
இலுப்பை மரப்பட்டையை ஊறவைத்து, அந்தத் தண்ணியைச் சொரி, சிரங்குகள் மீது தடவினால் விரைவில் நிவாரணம் பெறலாம்.
இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்துவந்தால் இடுப்பு வலி குறையும்.
இலுப்பை எண்ணெய், கடுகு எண்ணெய், புங்கம் எண்பொய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அதில் பசு நெய் சேர்த்துக் கடைந்தால் கிடைக்கும் வெண்ணெய்யை, எழு நாள்களுக்கு நெஞ்சுப் பகுதியில் தடவிவந்தால் மார்புச் சளி, மார்பு வலி போன்றவை குணமாகும்.
இலுப்பை மர இலைகளை மார்பகங்கள் மீது வைத்துக் கட்டிக்கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
இலுப்பை எண்ணெய்யை சேற்றுப்புண்கள் மீது தடவிவந்தால் அவை விரைவில் ஆறும்.
இலுப்பை எண்ணெய்யை தினமும் இரண்டு துளிகள் சாப்பிட்டுவந்தால் உடல் வலிமை பெறும்.
இலுப்பைப் புண்ணாக்கைச் சுட்டு, தேங்காய் எண்ணெய்யோடு கலந்து பூசினால் சேற்றுப்புண், கரப்பான் போன்றவை குணமாகும்.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் காலையில் உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு இலுப்பை எண்ணெயை சில துளிகள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் சரியாகும்.