இலுப்பை மரத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

இலுப்பை மரம் இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்கிறது. இலை, பூ, காய், பழம், மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது.

இலுப்பைப்பூவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

Also Read : அரச மரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்

இலுப்பைப்பூவை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை அருந்தி வந்தால் இருமல், வெப்பத்தினால் உண்டான சுரம் நீங்கும்.

இலுப்பை எண்ணெய் சமையலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் சிறிது கசப்புச் சுவையாக இருக்கும். இந்த எண்ணெய் குளிர்காலத்தில் உறைந்து விடும்.

இலுப்பை மரங்கள் தமிழகத்தில் 1950ம் ஆண்டு காலங்களில் 30,000 மரங்களுக்கும் மேல் அதிகமாக இருந்தன. ஆனால் 2015ம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

இலுப்பை மரம் உப்புநீரை தாங்குவதால் படகுகள் செய்வதற்கு இம்மரங்கள் அதிகமாக தேவைப்பட்டதால் இம்மரத்தின் அழிவிற்கு இதுவும் ஒரு வகையான காரணமாகும்.

Recent Post

RELATED POST