முன்னுரை:-
காலை உணவின் முக்கியத்துவம் என்ன என்பதையும், அதை சரியாக சாப்பிடாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் இந்த கட்டுரையில் தெளிவாக பார்க்கலாம்.
விளக்கம்:-
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் காலை உணவை சரியாக சாப்பிட வேண்டியது அவசியம்.
காலை உணவு தான் அந்த நாளையே சுறுசுறுப்புடன் எதிர்கொள்ள உதவியாக இருக்கும். சரி காலை உணவு ஏன் கண்டிப்பாக தவற விடக்கூடாது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
காரணங்கள்:-
நம் உடலில் உணவுகளை ஜீரணமாக்க அமிலம் ஒன்று சுரக்கும். அந்த அமிலம் காலை, மதியம், இரவு என்று சரியாக சுரக்கும். நாம் இரவு உணவு சாப்பிட்டதும், தூங்குவதற்கு சென்றுவிடுவோம். சுமார் 8 மணி நேரம் தூங்குகிறோம் என்று வைத்துக்கொண்டால், அவ்வளவு மணி நேரம் வேறு எதுவும் சாப்பிட மாட்டோம்.
இப்படி இருக்கையில், காலை உணவை தவறவிட்டால், 14 மணி நேரம் சாப்பிடாமலே இருப்போம். இந்த நேரத்தில், உடலில் சாப்பிடுவதற்கு சுரக்கும் அமிலம் சுரந்துக்கொண்டே இருக்கும்.
இந்த அமிலம், உணவு வயிற்றில் இல்லாத நேரத்தில் சுரந்தால், வயிற்றுப்புண் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதன்காரணமாக, அனைவரும் சாப்பிடாமல் இருக்கக்கூடாது.
நமக்கே வயிற்றுப்புண் வந்தால், தாங்க முடியாது எனும் பொழுது குழந்தைகளின் நிலைமையை நினைத்துப்பாருங்கள். குழந்தைகளுக்கு எப்போதும் 8 மணிக்கே சாப்பாடு கொடுக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு இயற்கையாகவே பசி எடுக்க ஆரம்பிக்கும்.