விண்வெளி மையத்திலிருந்து தீபாவளி வாழ்த்துகள் அனுப்பிய சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை சற்று வித்தியாசமாக பூமியில் இருந்து 260 மைல்களுக்கு (சுமார் 400 கிமீ) தொலைவில் விண்வெளியில் தனித்துவமாக கொண்டாட உள்ளார்.

மேலும், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து தனது தீபாவளி வாழ்த்துகளை இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ளவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

சுனிதா தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் சில முக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில மாதங்களாக அங்கு தங்கி, பல சவால்களை எதிர்கொண்டு பணியாற்றி வரும் இவர், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் தனது கலாச்சாரத்தை நினைவுகூர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கும் நன்றி, என சுனிதா வில்லியம்ஸ் கூறியுள்ளார். தீபாவளி வாழ்த்துகளை மக்களிடம் பகிர்ந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அவர் அனுப்பிய வீடியோ சமூக ஊடகங்களில் பெரிதும் பகிரப்பட்டு, மக்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் திருப்பித் தெரிவித்துள்ளனர்.

சுனிதா வில்லியம்ஸ் உலக அரங்கில் தன்னைச் சீரும் சிறப்புமாக நிலைநிறுத்திய ஒரு தலைசிறந்த வீராங்கனை. விண்வெளியில் சாதனை படைத்து 322 நாட்கள் தங்கி, அதே நேரத்தில் அதிக நேரம் நடைபயணம் செய்த பெண் என்ற பெருமையையும் பெற்றவர். இது சுனிதாவின் மூன்றாவது விண்வெளிப் பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent Post

RELATED POST