இந்துப்புவின் மருத்துவ குணங்கள்

பாறைகளிலிருந்து வெட்டி எடுக்கப்படும் இந்துப்பு நல்ல தண்ணீர் மற்றும் இளநீரில் ஊற வைத்து பதப்படுத்தப்பட்டு பிறகு நமக்கு கிடைக்கிறது. இது சற்று மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இந்துப்புவில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர், புளோரைடு, அயோடின் போன்ற சத்துக்கள் உள்ளது.

தினசரி உணவில் இந்துப்பை சேர்த்து வந்தால் வாதம், பித்தம், கபம் போன்ற வியாதிகள் நீங்கி உடலுக்கு வலு சேர்க்கும். இவை எளிதில் செரிமானமாகும்.

மிதமான சுடுநீரில் இந்துப்பு கலந்து வாய் கொப்பளித்து வர வாய்துர்நாற்றம் நீங்கும். மேலும் பல் வலி, பல் ஈறு, வீக்கம், என பல் சம்பந்தமான வியாதிகள் குணமாகும். மூல வியாதிகள் குணமாக இந்துப்பு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீரக இயக்கங்கள் சீராகி சிறுநீரகத்தை பாதுகாக்கும். தோல் சுருக்கம் ஏற்படாமல் இளமையாக வைத்திருக்கும். உடல் எடையை குறைப்பதற்கும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.

குளிக்கும் முன், இந்துப்பை உடலில் தேய்த்து சற்றுநேரம் கழித்து குளித்துவர, உடல் அசதி நீங்கி, மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும்.

Recent Post

RELATED POST