உலகளவில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வகை வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கை முட்டைப் பருவம், இளம் புழு பருவம், கூட்டுப்புழு பருவம், வண்ணத்துப் பூச்சி பருவம் என நான்கு பருவங்களைக் கொண்டது.
பொதுவாகப் பறவைகள் எந்தப் பூச்சியைப் பார்த்தாலும் சாப்பிட்டுவிடும். ஆனால் பட்டாம்பூச்சிகளை பெரும்பாலும் பறவைகள் வேட்டையாடுவதில்லை.
வண்ணத்துப் பூச்சிக்கு நான்கு இறக்கைகள் உள்ளன. வண்ணத்துப் பூச்சிகள் தனது சிறகை முதல் தடவை விரிப்பதற்கு சில மணிநேரங்கள் எடுத்துக்கொள்ளும்.
மொனார்க்’ என்கிற வண்ணத்துப் பூச்சி இனங்கள் 4,000 கிலோமீட்டர் வரை கூட பறந்து செல்லுமாம்.
இதனுடைய வாழ்நாள் மிகக் குறைவு. இரண்டு நாள் முதல் இரண்டு வாரங்களுக்குள் இறந்துவிடும். அல்லது மற்ற உயிரினங்களுக்கு இரையாகும்.