பூனைகளை பண்டைய எகிப்தியர்கள் அதனை வழிபாட்டு விளங்காக வழிபட்டு வந்தனர். ஆரம்பகாலத்தில் எலிகளை உண்பதற்காகவே பூனைகள் வளர்க்கப்பட்டது. பிறகு மனிதர்களுடன் அது இயல்பாக பழகுவதால் பூனைகளை வளர்க்கத் தொடங்கினர்.
பொதுவாக பூனைகள் உணவு சாப்பிடும் போது அதை மூன்று முறை ருசித்து சோதனை செய்து பார்த்த பிறகு தான் நான்காவது முறை நம்பிக்கையுடன் சாப்பிடும். பூனைகள் தனது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றுகிறது.
Also Read : முதலைகள் பற்றி நீங்கள் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள்
பூனைகளால் இனிப்பு பொருட்களை ருசிக்க முடியாது. பெண் பூனைகளை ராணி என்று அழைக்கப்படுகிறது. ஆண் பூனைகள் டாம் என்று அழைக்கப்படுகின்றன.
இரவு நேரங்களில் பூனைகளுக்கு பார்வைத்திறன் கேட்கும் திறன் அதிகம் உண்டு. எனவே இரவில் சிறிய சத்தம் கேட்டாலும் சத்தமின்றி இரையை வேட்டையாடி விடும்.
பூனைகள் பெரும்பாலும் 4 முதல் 5 கிலோ எடை கொண்டவை. பூனையின் காதுகளில் 32 தசை நார்கள் உள்ளது.
Also Read : ஆமை பற்றிய தகவல்கள்
பூனைகள் குறைவான மங்கலான ஒளியிலும் துல்லியமாக பார்க்கும் திறன் கொண்டது. பூனைகள் ஒரு நாளில் 14 மணி நேரம் தூங்குவதிலேயே கழித்து விடுகிறது.
பூனைகள் தமது காதே 180 டிகிரி வரை அசைக்க கூடியது. இரண்டு காதுகளையும் தனித்தனியாக அசைக்கக் கூடிய திறமையும் கொண்டது. பூனைகளுக்கு மோப்ப சக்தி மனிதர்களை விட 14 மடங்கு அதிகம். பூனைகள் நூற்றுக்கும் மேற்பட்ட வித்தியாசமான சப்தங்களை எழுப்ப கூடியது.
பெண் பூனைகள் வலது கால் பழக்கம் கொண்டது. ஆண் பூனைகள் இடது கால் பழக்கம் கொண்டது.