தூக்கத்தை பற்றிய சில தகவல்கள்

சிலர் லேசாகக் குரல் கொடுத்தாலே தூக்கத்திலிருந்து எழுந்து விடுவார்கள், வேறு சிலரையோ முக்கி எடுத்தால்தான் தூக்கத்திலிருந்து கலைக்க முடியும். இதைக் கொண்டு முதல் வகையினரை சுறுசுறுப்பானவர்கள் என்றும் இரண்டாவது வகையினரை சோம்பேறிகள் என்றும் முடிவு கட்டிவிடக் கூடாது.

மூளையில் உள்ள மெலடோனின் என்ற சுரப்பி சுரந்தால், தூக்கம் வரும். அதன் சுரப்பு அதிகமாக அதிகமாக, தூக்கம் நம்மைப் பற்றிக்கொள்ளும் என்கின்றனர். இது இரவு நேரத்தில் கறக்கும். இது நள்ளிரவில் அதிகமாக சுரந்துவிடுவதால், அப்போது ஆழ்ந்த தூக்கம் வருகிறது.

தூங்கும் நிலையை, நான்கு பிரிவுகளாக பிரிக்கின்றனர். மிதமான நிலை, அதிக தூக்க நிலை, ஆழ்ந்த தூக்க நிலை, மிக ஆழ்ந்த தூக்க நிலை, இது, படிப்படியாக நிகழக்கூடியது, மிதமான நிலையில் தூங்கும்போது ஒருவரை எளிதில் எழுப்பிவிடலாம்.

மிக ஆழ்ந்த நிலையில் தூங்கும்போது அவரை எழுப்புவது கடினம். மேற்படி நான்கு நிலைகளும், ஒன்றரை மணி நேரத்துக்கு ஒருமுறை மாறி மாறி வரும். இவ்வாறு, நான்கைந்து தூக்க சுழற்சி இருப்பது, ஆரோக்கியத்தின் அடையாளம் என்கின்றனர்.

தூக்கத்தின் போது, மனித மூளையில், மூன்று விதமான அலைகள் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளனர். தாக்கத்தின் தொடக்க நிலையின்போது, மூளையில் ‘பீட்டா அலைகள்’ ஏற்படுகின்றன. படுத்து தூங்கிய உடன், ‘ஆல்பா அலைகள் ஏற்படுகின்றன.

ஆழ்ந்த தூக்கத்தின் போது பீட்டா அலைகள், மிக ஆழ்ந்த தூக்கத்தின் போது, டெல்டா அலைகள் ஏற்படுகின்றன, தூக்கத்தை வேறுவிதத்தில் இரண்டாகப் பிரிக்கலாம். பகல் நேர தூக்கம், இரவு நேர தூக்கம். பகலில் மட்டுமே தூங்கும் விலங்குகள் உள்ளன. அதுபோல, இரவில் மட்டுமே தூங்கும் விலங்குகள் உள்ளன.

பகலிலும் தூங்கி, இரவிலும் தூங்கும் மனிதர்களும் உள்ளனர். உலகில் அதிக நேரம் தூங்கும் விலங்கு என்றால், அது வெளவால்தான், இது 19.5 மணி நேரம் தூங்கும். குறைவான நேரம் தூங்கும் விலங்கு, ஒட்டகச்சிவிங்கி, இது ஒன்றே முக்கால் மணி நேரம் மட்டும்தான் தூங்கும்!!

Recent Post

RELATED POST