நம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய தோசைக்கல், பணியாரக்கல், வடசட்டி போன்ற இரும்பு பாத்திரங்களை நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருந்தால் அவற்றை சுத்தப்படுத்தி பின்பு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
இரும்பு பாத்திரங்களை நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்தால், பாத்திரத்தை சுத்தமாக கழுவி உலர வைக்கவேண்டும். பாத்திரம் முழுவதும் தேங்காய் எண்ணெயை நன்றாக தடவி வைக்கலாம்.
நீண்ட நாட்கள் பயன்படுத்தாத இரும்பு பாத்திரத்தில் நீர் துளிகள் இருந்தால் அது துரு புடிக்க ஆரம்பிக்கும். எனவே பாத்திரங்களை கழுவிய உடனே நன்றாக துடைத்து வைப்பது நீண்ட நாள் பயன்பாட்டிற்கு உதவும்.
அதிக துருப்பிடித்த பாத்திரமாக இருந்தால் எண்ணெய் கொண்டு பாத்திரத்தை நன்றாக துடைத்து எடுத்து சுத்தம் செய்துபயன்படுத்தலாம்.
கைகளால் அல்லாமல் பிரஷ் கொண்டு எண்ணெயை முழுவதும் பயன்படுத்துவது துருப்பிடிக்காமல் இருக்க செய்யும்.