மனிதனின் வாழ்வில் தூக்கம் என்பது மிக ஆரோக்கியமான மற்றும் இன்றியமையாத ஒரு அருமருந்தாகும்.
நாம் தூங்கும் நேரம் குறைவு, ஏன்?
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட் போனிலும், சமூக வலைத்தளங்களிலும் செலவழித்துவிடுகின்றனர். இதன் காரணமாக நாம் தூங்கும் நேரத்தினை மறந்து அதிக மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். எனவே இவைகளை தவிர்த்து அதிக நேரத் தூக்கம் பெற்று நம் வாழ்வில் ஆரோக்கியத்தையும், புத்துணர்சியையும், ஆழ்ந்த தூக்கம் மூலம் திரும்பப் பெறலாம்.
நல்ல தூக்கம், என்ன பயன்?
இரவு நல்ல தூக்கம் இருந்தால் உடலுக்கு நல்ல ஆற்றலையும், நல்ல உணர்வுகளையும் மற்றும் ஒரு குழுவில் சிறந்த பங்களிப்பை தரும் அளவிற்கு செயல்படுவீர்கள்” என ரேச்சல் சலாஸ் என்ற நரம்பியல் நிபுணர் தெரிவிக்கிறார், ரேச்சல் சலாஸ் அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் தூக்க மருந்து மற்றும் தூக்க குறைபாடுகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் நிபுணர் ஆவார்.
வாழ்வின் சிறந்த முதலீடு – தூக்கம்
சிறந்த வாழ்விற்கு சிறந்த முதலீடு நல்ல தூக்கம், அது உங்கள் உடலுக்கு செய்யும் சிறந்த முதலீடு ஆகும். இதை தவிர்த்து பொருளாதார முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் ஓய்வின்றி அலைவதால் ஒரு பயனும் இல்லை. ஏனென்றால் அனைத்தையும் அனுபவிக்க நாம் முதலில் உயிரோடு இருக்க வேண்டும். ஆகவே நன்றாக உறங்குகள், நல்வாழ்வை வாழுங்கள்.