உணவுக்கட்டுப்பாடு உடலுக்கு நல்லதா?

உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் பொழுது நம்முடைய பல தவறான அபிப்பிராயங்கள் உள்ளன. அவற்றில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்

உடல் பருமன் பரம்பரை ஆனதா

இந்த கருத்து முழுமையாக ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல, ஏனெனில் ஒரு சதவிகித அளவிற்கு மட்டுமே பிள்ளைகளில் குண்டு உடம்பு பெற்றோர்களின் காரணமாக அமைகிறது. இது சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 99 சதவிகித மக்களில் அதிகமான உணவு உண்பதால் குண்டானவர்கள்.

அதிக நாள் உயிர் வாழ்வார்களா?

ஆம் சத்தான ஆதாரத்தை அளவாக சாப்பிட்டு வருபவர்களுக்கு அதிக நாட்கள் உயிர் வாழ்வார்கள் என்பது உண்மை.

தினம் ஒரு ஆப்பிள்

ஆப்பிள் மிதவெப்ப மண்டல பிரதேசங்களில் விளையும் பழம். இதில் அதிகமான சர்க்கரை சத்தும் கிடையாது, இதனால் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு, அதேநேரம் வெப்பமண்டலப் பிரதேச இனிப்பு பழங்கள் சர்க்கரை சத்து அதிகம் இருப்பதால் உடலில் சர்க்கரை அளவு உயர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும். இதய நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

உடற்பயிற்சி செய்தால் அதிகமாக சாப்பிட வேண்டி இருக்குமா?

இல்லை, இருபது அல்லது முப்பது நிமிடங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்தால் கூட நிறைய சாப்பிட வேண்டியது இருக்காது. ஆனால் உடற்பயிற்சிக்கு பின்னர் முடிந்தவரைக்கும் ருசியான உணவுகள் சாப்பிடுவது குறைத்துக் கொள்வது நல்லது, ஏனென்றால் சுவையான உணவு எடுத்துக் கொண்டால் உடற்பயிற்சிக்கு பலன் இருக்காது.

தினமும் ஒரு லிட்டர் தண்ணீர்

ஆம், தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் அருந்துவதால் உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால், அது சாப்பிடும் அளவினை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும். ஆனால் இது அனைவருக்கும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்லேட் சாப்பிடலாமா?

சாக்லேட் சாப்பிட்டால் உடம்பு குண்டாகி விடும் என்று சிலர் டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆனால் மருத்துவ விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி, எந்த ஒரு தனிப்பட்ட உணவும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம் ஆகிவிட முடியாது என்று கூறுகிறது.

சைவ உணவு உடல் எடையை குறைக்குமா?

இக்கருத்து முற்றிலும் தவறானது என்பது உண்மைதான், ஆனால் மாமிசம் அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும்.

உணவு கட்டுப்பாடும் உடல் வடிவம்

உடல் எடை குறைவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கி ரத்த ஓட்டம் சீரடையும், இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், அதற்காக உடல் எடையைக் குறைந்தால் உடலில் வடிவம் மாறிவிடும் என்பது தவறு.

காலை உணவு எடையை குறைக்குமா?

இதில், ஓரளவுக்கு உண்மை இருக்கிறது, ஏனெனில் ரசாயன மற்ற காரணங்களால் காலையில் சாப்பிடும் உணவின் மூலம் உடலுக்கு தேவையான சக்தியை எடுத்துக் கொள்கிறது. எனவே உடல் எடை குறைகிறதோ இல்லையோ சமச்சீராக இருக்கும். இந்த சமநிலை உடல் எடை போடாமல் பார்த்துக் கொள்கிறது.

உணவு கட்டுப்பாட்டால் சோர்வடைவேம?

உணவுக் கட்டுப்பாட்டுக்கும் மூளையில் சோர்வு இருக்கும் தொடர்பு இருப்பது என்பது உண்மையே. உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைப்பவர்கள் பல நேரங்களில் அதே சிந்தனையாகவே இருப்பார்கள், இதன் காரணமாக மூளையின் செயல்பாடு குறைந்து ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புகள் உருவாகும்.

Recent Post

RELATED POST