வீட்டில் நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்படும் அகர்பத்தியை தூபக் குச்சி என்றும் அழைப்பார்கள். இது பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் மத மற்றும் கலாச்சாரத்தின் சான்றாக இருக்கிறது.
அகர்பத்தி வாசனை நம் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மற்றும் கெட்ட சக்திகளைத் தடுப்பதாக நம்பப்படுகிறது. இரவு தூங்கும் முன்பு வீட்டில் அகர்பத்திகள் ஏற்றிவைத்தால் அதில் இருந்து வரும் வாசனை நல்ல உணர்வை கொடுத்து இனிமையான தூக்கத்திற்கு உதவுகின்றன.
Also Read : எந்த திரியில் விளக்கு ஏற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும்?
காலையில் வீட்டில் அகர்பத்திகள் ஏற்றிவைத்தால் நாள் முழுக்க நல்ல மனநிலை இருக்கும். இதனுடைய வாசனை நல்ல சூழலை உருவாக்கவும், நல்ல மனநிலையை கொண்டு வரவும் உதவுகிறது.
உங்களுக்கு மிகவும் பிடித்த வாசனை உள்ள அகர்பத்தியை வீட்டில் பயன்படுத்துங்கள். குறிப்பாக மல்லிகை, சந்தனம், லாவண்டர் போன்ற வாசனைகள் உங்களது மகிழ்ச்சியைத் தூண்டி நல்ல உணர்வை ஏற்படுத்தக் கூடியவை.
பல வரலாற்றுக் குறிப்புகளில் அகர்பத்திகள் எதிர்மறையை அகற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதனால் நேர்மறை ஆற்றல் வீட்டில் பெருகி, தெய்வம் வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்வதாகவும் சொல்லப்படுகிறது. எனவே தினசரி வீட்டில் அதர்பத்தி ஏற்றுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.