வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது நல்லதா?

கோடைகாலத்தில் சாத்துக்குடி ஜூஸ் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இது உடலுக்கு நீர் சத்தை தரும். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

மொசாம்பி என்று அழைக்கப்படுகிற சாத்துக்குடி ஜூஸ் நோய் வாய்ப்பட்டு தளர்ச்சி அடைந்த உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை சாத்துக்குடியில் அடங்கியுள்ளது.

சாத்துக்குடியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அதை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள கூடாது. வெறும் வயிற்றில் சாப்பிடுவதனால் ஏற்படக் கூடிய பக்க விளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

சாத்துக்குடியை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது அதிலுள்ள சுண்ணாம்பு தன்மை வயிற்றில் உள்ள அமிலத்துடன் சேர்ந்து வினைபுரிந்து வயிற்றில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். இதனால் வயிற்றில் புண் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சாத்துக்குடி சாறு அதிகளவில் எடுத்துக் கொண்டால் பல் எனாமலில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் ஈறுகளில் எரிச்சலை உருவாக்கும்.

சாத்துக்குடி ஜூஸை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் அதில் உள்ள வைட்டமின் சி அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்து குமட்டல் போன்ற பிரச்சினையை உருவாக்கும்.

கர்ப்பிணி பெண்கள் சாத்துக்குடி ஜூஸ் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, அதிலுள்ள அதிகப்படியான அமிலத் தன்மை காரணமாக வயிறு வலி, வயிற்றுப் பிடிப்புகள் போன்றவை அதிகமாக ஏற்பட வாய்ப்பு உண்டு.

Recent Post

RELATED POST