கடந்த கால காதல் பற்றி தற்போது உள்ள மனைவியிடமோ, கணவனிடமோ சொல்வதால் என்ன நடக்கும் என்பது பற்றியும், எது உண்மையான அன்பு என்பது பற்றியும் இந்த கட்டூரையில் விளக்கமாக பார்க்கலாம்.
கடந்த கால காதல்:
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும், கடந்த கால காதல் என்பது கண்டிப்பாக இருக்கும். ஏன், உங்களது பெற்றோர்களுக்கு கூட அவ்வாறு ஒரு உறவு முந்தைய காலங்களில் இருந்திருக்கும். இது ஒரு சாதாரண விஷயம் மட்டுமே. இதனை பெரிய பிரச்சனையாக நீங்கள் கருத வேண்டாம்.
நீதிமன்ற வாசல்:
நீதிமன்ற வாசலில், அதிகப்படியான தம்பதிகள் விவாகரத்து கேட்டு நிற்பதற்கு, முந்தைய கால உறவு பற்றி தெரியவந்ததே ஆகும். பொதுவாக பெண்கள் தான் இந்த விஷயங்களில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். வேறு யாராவது வழியாக, தங்களது முந்தைய காதல் தெரிய வந்துவிடுமோ என்று பயம் கொள்கிறார்கள். அதற்கு பதிலாக தாங்களே கூறி விடலாம் என்ற முடிவுகள் வருகிறார்கள். உண்மையில் சொல்லப்போனால், இது தான் தவறான முடிவு. நீங்கள், இதற்கு முன்னால், என்ன உறவில் இருந்தீர்கள் என்பது முக்கியம் அல்ல. தற்போது உள்ளவர் தான் உங்களது எதிர்காலம். அவர்களுடன் எப்படி சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள். அப்படியே வேறு யாராவது வழியாக விஷயம் தெரிந்தால், அதனை எப்படி தைரியமாக எதிர்கொள்வது என்பதை மட்டும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
எது உண்மையான அன்பு?
நீங்கள் உங்களை பற்றிய அத்தனை விஷயங்களையும் உங்களது துணைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது கிடையாது. முதலில், உங்களுக்கே உங்களை பற்றி முழுவதுமாக தெரியாது. அதனால், குற்றவுணர்வு கொள்ள வேண்டாம். உங்களது கடந்த கால வாழ்வு எதுவாக இருந்தாலும், அதனை ஏற்றுக் கொள்வதே, பெருந்தன்மையான அன்பு. அதாவது, உண்மையான அன்பிற்கு அதுவே இலக்கனம் ஆகும்.
உங்களது கடந்த கால வாழ்க்கையை மனதில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, நிஜ வாழ்க்கையில் முழு மனதோடு வாழுங்கள். அந்த சோகமான வடுக்களை தூக்கி எறிந்துவிடுங்கள். அதனை சொல்லாமல் இருப்பது, துரோகம் செய்கிறோம் என்ற உணர்வை புறம் தள்ளுங்கள். மகிழ்ச்சியாக வாழுங்கள்.