இடம் பெயர்ந்த தோள்பட்டை : விபத்தில் சிக்கிய நடிகர் ஜெய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெய். சென்னை 600028 ‘ படத்தை தொடர்ந்து நடித்த, ‘சுப்ரமணியபுரம்’ படம், அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. அதன் பிறகு அடுத்தடுத்த தோல்வியை கொடுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தார். பிறகு ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’ போன்ற படங்களுக்கு மீண்டும் வரவேற்பு கிடைத்தது.

cinema news in tamil

தற்போது சுந்தர் சி. தயாரிப்பில், இயக்குனர் பத்ரி இயக்கி வரும் படத்தில் நடிகர் ஜெய் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த சண்டை காட்சியில் ஒரு மேஜையை உடைக்கும்படியான காட்சிகளும் இருந்தன. அதனை படமாக்கும் போது, எதிர்பாராத விதமாக அவருடைய தோள்பட்டை இடம் பெயர்ந்தது.

Advertisement

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதை பொருட்படுத்தாமல் மீதியுள்ள காட்சிகளையும் நடித்து முடித்துகொடுத்துள்ளார். நடிகர் ஜெய்யின் இந்த அர்ப்பணிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளது.