ஜவ்வரிசி என்றவுடன் நினைவுக்கு வருவது பாயாசம் தான். எல்லா வகையான சுபகாரியங்களும் ஜவ்வரிசி இல்லாத பாயாசம் இல்லாமல் நிறைவு பெறாது. ஜவ்வரிசியில் பல நன்மைகள் உள்ளது. குறிப்பாக இதில் பைபர் அதிகம் உள்ளது. இவற்றை சத்துக்கள் நிறைந்த காய்கறிகளோடு சேர்த்து சாப்பிடும் போது சத்தான உணவைத் தர முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் தசைகளுக்கு நல்ல வலிமையைத் தருகிறது. மேலும் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு ஆரோக்கிய உணவாக ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை கொடுக்கலாம்.
ரத்த அழுத்தத்தை சரி செய்யும்
உயர் ரத்த அழுத்தம் என்பது தற்போது இந்தியாவில் அதிகமாகி வருகிறது. இதற்கு ஜவ்வரிசி நல்ல தீர்வாக அமையும். ஜவ்வரிசியில் பொட்டாசியம் உள்ளதால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்கிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது.
கரு வளர்ச்சி
கர்ப்பிணி பெண்கள் உணவில் ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்வது நல்லது. இது உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மை பயக்கும். கரு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஜவ்வரிசியில் இருக்கிறது. மேலும் ஜவ்வரிசி குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
உடலுக்கு தேவையான ஆற்றல்
ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் இது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. உடல் எடையை அதிகரிக்க விரும்புவோர் உணவில் ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் ஆரோக்கியமான முறையில் உங்களின் உடல் எடை அதிகரிக்கும்.
செரிமான கோளாறு
மலச்சிக்கல், செரிமான கோளாறு, வாயு வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளுக்கு ஜவ்வரிசி நல்ல தீர்வை தருகிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
எலும்புகளுக்கு ஆரோக்கியம்
ஜவ்வரிசியில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் எலும்பு வலுவடைகிறது. இதனால் மூட்டுவலி எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரவிடாமல் தடுக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் ஜவ்வரிசியை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் அதிகமாக சர்க்கரை உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்ப்பது நல்லது.