வன்னியில் மூவின மக்களாலும் நேசிக்கப் படுபவர்தான் அல்ஹாஜ் காதர் மஸ்தான் சேர், இவருடைய தந்தை காட்டிய வழிகாட்டலும், மக்களுக்காக சமூக பணிகளில் தன்னை அர்பணித்து மக்கள் அரவணைப்புடன் இன்றுவரை அரசியல் களத்தில் அவரை நிலைபெறவைத்துள்ளது.
பாரிய தொழில்நிறுவனத்தை அமைத்து பலருக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்து பல்வேறு சமூகநல உதவித்திட்டங்களைச் செய்தவர் உங்கள் காதர் மஸ்தான்.
2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியடைந்த நம் மண்ணின் மைந்தர் காதர் மஸ்தான், வன்னி மக்களுக்கான பல திட்டங்களையும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான பல செயல்திட்டங்களையும் செய்துள்ளார்.
மக்களுக்காவே வாழ்ந்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள நமது காதர்மஸ்தான் நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் வன்னி மக்களின் பேரதரவுடன் கங்காரு சின்னத்தில் போட்டியிடுகிறார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கௌரவ அநுரகுமாரதி சாநாயக அவர்கள் பதவியேற்றதன் பின்னர் ஓர் புதிய அரசியல் தளம் உருவாகியுள்ளது. ஊழலற்ற, தூய்மையான அரசியல் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும், வேறுபாடற்று அனைத்து சேவைகளும் சகலரையும் சென்றடையவும், நிலையான அபிவிருத்திகள், தரமான கல்வி மற்றும் சுகாதார சேவைகளுடனான சுதந்திரமான, நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கை வாழ வழி வகுக்கப்பட வேண்டும் என்பது அனைவரதும் நீண்டகால கனவாகும்.
அதனடிப்படையில் அமையப் போகின்ற அரசாங்கத்துடன் இணைந்தால் மட்டுமே எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் கிட்டும். எனவேதான் நமது அணி ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியில் களம் இறங்குகின்றது.
தொழிலாளர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்துத் தரப்பினருடனும் மிக நெருக்கமாக செயற்படுகின்ற எமது கட்சியானது மக்களோடு இணைந்து அவர்களது உரிமைகளுக்காக செயற்பட்டு செழிப்பான, வளமான, ஐக்கியமான ஒரு நாட்டை கட்டியெழுப்ப அரச நிர்வாகத்தோடு இணைந்து அவர்களது ஆலோசனைகள், வழிகாட்டல்களுடன் எமது இலக்கை நோக்கி நாம் பயணிக்கவுள்ளோம்.
பல்வேறு தரப்பினர்களின் அழைப்புக்கள், வேண்டுகோள்கள் இருந்தாலும் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப அமையப் போகின்ற அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட சுதந்திரமாக தீர்மானம் மேற்கொள்ளக்கூடிய வகையில் இயங்குவதற்காகத்தான் நாம் தனித்து செயற்படுகின்றோம்.
அனைத்துத் தரப்பினரதும் தேவைகளையும், பிரச்சினைகளையும் அறிந்து தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடிய குறுகிய கால மற்றும் நீண்டகால அணுகுமுறைகளை மிகச்சிறப்பாக திட்டமிட்டு அவற்றை நடைமுறைச் சாத்தியமாக்கும் வகையில் ஆளும் தரப்பினரோடு இணைந்து செயற்படாத வரையில் நமது பிரச்சினைகளை தீர்க்க முடியாது.
ஐந்து வருடங்கள் எதிர் அணியில் இருந்து எதையும் சாதிக்க முடியாது. எமது மக்களின் தேவைகளை பெற்றுக் கொடுக்க முடியாத அல்லது அடையாளப்படுத்த முடியாத ஓர் அணியாக இருப்பதில் எப்பயனும் இல்லை. எனவேதான் சுத்தமான, பொறுப்புக் கூறக்கூடிய, குற்றச்சாட்டுகளிற்கோ, ஊழல்களிற்கோ உட்படாத அனைத்து தரப்பினர்களின் பிரச்சினைகளையும் நன்கு உணர்ந்த எமது வேட்பாளர்கள் ஓர் அணியாக பயணிக்க உள்ளனர்;. எனவே வன்னி மாவட்டத்தின் அனைத்து தரப்பினரையும், பிரதேசங்களையும்; நன்கு புரிந்துகொண்ட யதார்த்தவாதிகளான எமது அபேட்சகர்கள்; இணைந்திருப்பது எமது அணியின் சிறப்பம்சமாகும்.
எனவே அபிவிருத்தியுடனான எமது உரிமைகளை வென்றெடுப்பதை அரசியற் சித்தாந்தமாக தமது கொள்கைகளாக ஏற்றுக் கொண்டு உண்மை, நேர்மை, வெளிப்படைத் தன்மை என்பவற்றை தமது பண்பாடுகளாக கொண்டுள்ள நமது அணியினர்; மற்றுமொரு புதிய அத்தியாயத்தை வன்னிப் பெருநிலப்பரப்பில் உருவாக்க உங்கள் அனைவரினதும் வாக்குகளை கங்காரு சின்னத்திற்கு வழங்க வேண்டுமென தயவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
நிச்சயமாக எம் அனைவரையும் பாரிய சவாலுக்கு உட்படுத்துகின்ற தேர்தலாக இது அமையும் என்பது திண்ணம். எனவே தூர நோக்குகளுடன் விவேகமாக யதார்த்தத்தை நன்கு உணர்ந்த எமது வன்னி மக்களை உண்மையாகவும் தூய்மையாகவும் இதயத்தால்; நேசிக்கும் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டிய மிகப் பாரிய கடப்பாடு தற்போது உங்களது கைகளில் தரப்பட்டுள்ளது.
எனவே வன்னி மக்களின் தனித்துவமான பிரதிநிதிகளாக எமது அணியினரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து எமது தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்ள மக்கள் நலனை மாத்திரம் தமது இலட்சியமாகக் கொண்டு இயங்குகின்ற, கடந்த காலங்களில் தமக்குக் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிக உயர்வான பணிகளை எமக்காக ஆற்றிய எமது அணியினரோடு இணைந்து வன்னியை வசந்தமாக்கும் எமது பயணத்தில் நீங்களும் பங்காளிகளாகி உங்கள் வாக்குகளை அளித்து எமது பாராளுமன்ற பிரதிநிதிகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார மேம்பாடு, விவசாயம், கடற்றொழில் ஆகிய துறைகளையும் தலைமன்னார் துறைமுகத்தை தளமாகக் கொண்டு கப்பல் கட்டும் தளம் ஒன்றை உருவாக்குவதற்கும் மீன்பிடி துறைமுகங்களை உருவாக்குவதற்கும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் வியாபார உற்பத்தி மேம்பாட்டுத் திட்டங்களை அரச மற்றும் தனியார்துறை பங்களிப்புகளுடனான திட்டங்களாக செயற்படுத்தி இளைஞர், யுவதிகளின் வேலையின்மை பிரச்சினையை தீர்ப்பதற்கும், வருமானத்தை மேம்படுத்தி வளமான ஓர் சமுதாயத்தை உருவாக்குகின்ற திட்டங்களை செயற்படுத்த எண்ணியுள்ள கங்காரு சின்னத்தில் போட்டியிடுகின்ற உங்கள் அணியினரை உங்கள் வாக்குகளால் பலப்படுத்துமாறு வேண்டி நிற்கின்றோம்.
வன்னி பெருநிலப்பரப்பில் நன்மதிப்பைப் பெற்ற மஸ்தான் றேடர்ஸின் உரிமையாளரான மர்ஹூம் காதர் முதலாளி அவர்களின் மூத்த புத்திரனாக வன்னி மக்களது அன்பினாலும், ஆதரவினாலும் இரண்டுமுறை பாராளுமன்றம் சென்று உங்களது அபிமானத்தைப் பெற்று என்னாலான உச்சகட்ட சக்தியை பயன்படுத்தி எனது கடமையை செவ்வனே செய்திருக்கிறேன்.
அதுமட்டுமல்லாது வன்னி மக்களை கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் மேம்படுத்துவதே எனது இலட்சியமாக எடுத்துள்ளேன். அதற்காக நான் அயராது உழைப்பேன்.
நான் தொடர்ந்தும் உங்களது ஆசீர்வாதங்களுடன் எனது கடமையினையும், சேவைகளையும் எமது வன்னி மண்ணுக்காக செவ்வனே நிறைவேற்றுவேன் என உறுதி கூறுகின்றேன். வன்னி பெருநிலப்பரப்பில் எனது சேவைகளை எவ்வித பாகுபாடுகளும் இன்றி அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் செய்துள்ளேன் என மிக உறுதியாக கருதுகின்றேன்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனிப்பட்ட விடயமாக இருந்தாலும் அரசியல் விடயங்களாக இருந்தாலும் எனது முழுமையான பங்களிப்புகளை நீதியாகவும் நியாயமாகவும் இதுவரை வழங்கியுள்ளேன்.
எனவே நீங்கள் என்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் அன்பையும் ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தி இத்தேர்தலிலும் உங்கள் பெறுமதியான வாக்குகளை வழங்கி உங்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவீர்கள் என நம்புகிறேன். கங்காரு சின்னத்திற்கும் எனது இரண்டாம் ( 2 ) இலக்கத்திற்கும் வாக்களித்து வன்னியை வசந்தமாக்குவோம்… ஊழலற்றி ஆட்சியை வென்றெடுப்போம்…