சருமத்திற்கும் கூந்தலுக்கும் பொலிவு தரும் கடுகு எண்ணெய்

உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகளில் இந்த கடுகு எண்ணெயும் ஒன்றாகும். இந்த கடுகு எண்ணெயை வைத்து உங்கள் சரும அழகையும், இளமையையும் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

இந்த கடுகு எண்ணெயை சமையலுக்கும் பயன்படுத்தலாம். குளிர் காலங்களில் இதை தேய்த்து குளித்தால் உடல் வெதுவெதுப்பாக இருக்கும். மூட்டு வலி நீங்கும். இது உடலிலுள்ள தேவையில்லாத முடியையும் நீக்கும்.

கடுகு எண்ணெய் பாட்டி வைத்தியத்தில் முக்கியமான ஒரு பொருளாகும். நம்முடைய வீட்டிலேயே நாம் நம்மை ஆரோக்கியமாக, அழகாக வைக்க இந்த கடுகு எண்ணெய் பயனுள்ளதாக உள்ளது.

கடுகு எண்ணெய் சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. வாதநோய் ஏற்படாமல் தடுக்கின்றது. பற்களின் வலிமை மற்றும் பல் சொத்தைக்கு கடுகு எண்ணெய் சிறந்ததாகும்.

பல் இடுக்குகளில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, பற்களை வலிமையாக வைத்து வாய்நாற்றத்தையும் நீக்குகிறது.

கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால், உடல் எலும்பு மற்றும் சதைகள் வலிமை பெறும். இது உடல் சூட்டை அதிகரித்து. இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.

கூந்தல் பொலிவு பெற

கடுகு எண்ணெயுடன் சிறிதளவு தயிர் சேர்த்து தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும், பின் அரைமணி நேரம் கழித்து குளிக்கவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், கூந்தலின் வளர்ச்சி அதிகரித்து, கூந்தல் நல்ல பொலிவுடன் காணப்படும்.

பொடுகு தொல்லை நீங்க

கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை இவற்றை ஒன்றாக கலந்து, தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

சரும அழகு

நமது சருமத்தை பளிச்சென்று வைக்க இந்த கடுகு எண்ணெய் பயன்படுகிறது. தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய் இவற்றை ஒன்றாக கலந்து 15 நிமிடம் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். பின் ஃபேஸ் வாஷ் போட்டு கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், முகம் பளிச்சென்று மென்மையாக மாறுவதை காணலாம்.

Recent Post

RELATED POST