காலில் கருப்பு கயிறு கட்டும் பழக்கம் சிலருக்கு உள்ளது. அதை ஏன் கட்டுகிறார்கள்? அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கருப்பு கயிறை காலில் கட்டுவதால் தீய சக்திகள் நம்மை நெருங்காது. காலில் கருப்பு கயிறு கட்டும் போது அதில் ஒன்பது முடிச்சுகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கருப்புக் கயிறு கட்டிக் கொள்ள நினைப்பவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் கட்டிக் கொள்வது நல்லது. சனிக்கிழமை அல்லது மதியம் 12 மணிக்கு இந்த கருப்பு கயிறை கட்டிக் கொள்ளலாம்.
உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் ஆஞ்சிநேயர் சன்னதியில் வைத்து கயிறு கட்டிக் கொள்ளலாம். கயிறு கட்டும் போது மனதில் ‘ஸ்ரீராம ஜெயம்’ மந்திரத்தை உச்சரிப்பது நல்லது.
சனிபகவானின் பார்வை வேகத்தை குறைக்கும் சக்தி இந்த கருப்பு கயிறில் உள்ளது. செய்வினை, கண் திருஷ்டி போன்றவைகள் ஏற்படாமல் பாதுகாக்கும். பருவமடைந்த பெண்கள் கருப்பு கயிற்றை தங்களுடைய வலது காலில் கட்டிக்கொண்டால் பயம் நீங்கும். தீய சக்திகள் நெருங்காமல் பாதுகாக்கும்.