கழுத்தை சுற்றியிருக்கும் கருமை நிறம் நீங்குவதற்கான வீட்டு வைத்தியம்..!

கழுத்தில் இருக்கும் கருமையான நிறம், முக பொழிவை கெடுக்கும். இந்த மாதிரியாக இருக்கும்போது, ஆண்கள் காலர் இல்லாத டி-சர்ட்களை அணியவே சங்கடப்படுவார்கள். இந்த பிரச்சனை, ஒவ்வாமை மற்றும் கழுத்தை நன்கு தேய்த்து குளிக்காமல் இருப்பதால் ஏற்படும். இதனை தீர்ப்பதற்கான வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.

கழுத்தின் கருமை நிறம் நீங்குவதற்கான வீட்டு வைத்தியம்..!

  1. கற்றாழை
  2. ஆப்பிள் சிடர் வினிகர்
  3. பாதாம் எண்ணெய்
  4. தயிர்
  5. உருளைக்கிழங்கு

கற்றாழை:

கற்றாழையின் குழைந்து காணப்படும் சதைப்பகுதியை வெட்டி எடுத்து, அதனை கழுத்துப் பகுதியில் போட்டு தேய்த்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை நிறம் காணாமல் போய்விடும். ஆனால், சீதளமான உடல் கொண்டவர்கள் கொஞ்சம், அல்லது கற்றாழை உடலுக்கு ஒத்துக் கொள்ளாதவர்கள், கீழே கொடுக்கப்பட்ட மற்ற டிப்ஸ்களை பயன்படுத்துங்கள்.

ஆப்பிள் சிடர் வினிகர்:

ஆப்பிள் சிடர் வினிகரில் பஞ்சை நனைத்து கழுத்தை சுற்றிலும் தடவி வர கருமை நீங்கும்.

பாதாம் எண்ணெய்:

பாதாம் எண்ணெய் பல்வேறு நற்குணங்களோடு, கழுத்துப் பகுதியில் உள்ள கருமை நிறத்தை போக்கக்கூடிய ஒன்று. இரவு நேரங்களில், கழுத்துப் பகுதியில் பாதாம் எண்ணெயை தேய்த்து, மசாஜ் செய்துவிட்டு, தூங்கிவிட வேண்டும். அடுத்த நாள், அந்த இடத்தில் சுடுநீரை ஊற்றி கழுவி விட வேண்டும்.

தயிர்:

தயிரை கழுத்தை சுற்றிலும் தடவிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். தினமும் செய்ய கருமை நீங்கும்.

உருளைக்கிழங்கு:

கருமை நிறத்தை போக்குவதில், அதிக திறன் கொண்டது உருளைக்கிழங்கின் சாறு. இந்த சாற்றை, கழுத்துப் பகுதியில் போட்டு, 20 நிமிடங்களுக்கு பிறகு, கழுவினாலும், இந்த பிரச்சனை சரியாகும்.

முடிந்த அளவிற்கு, கழுத்துப் பகுதியில் உள்ள அழுக்குகளை தினமும் சோப்பு போட்டு கழுவி வந்தாலே இந்த பிரச்சனை வராது. ஒரு சிலருக்கு மட்டுமே ஒவ்வாமை ஏற்பட்டு, இந்த பிரச்சனை வரும்.

Recent Post