அருள்மிகு கள்வப் பெருமாள் திருக்கோயில்

ஊர் -திருக்கள்வனூர்

மாவட்டம்– காஞ்சிபுரம்

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர்– கள்வர் பெருமாள், [ஆதி வராகர்]

திருவிழா– வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி

திறக்கும் நேரம் – காலை 6 மணி முதல் பகல் 12 ;30 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8; 30 மணி வரை

தல வரலாறு

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இது 55 வது திவ்ய தேசம். வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் உலக மக்கள் செய்யும் பாவ புண்ணியங்கள் பற்றியும் அவர்கள் மாயையில் சிக்கி தவறுகள் புரிவது பற்றியும் பேசிய வேளையில், அவர்களது வாதம் அழகைப் பற்றி சென்றது.

அப்போது மகாலட்சுமி தான் மிகவும் அழகாக இருப்பதாகவும், பெருமாள் கருமை நிற கண்ணனாக இருப்பதையும் சுட்டிக் காட்டி தன் அழகின் மேல் கர்வம் கொள்ளவே பெருமாள் சினம் கொண்டு பெண்ணுக்கு அழகு இருக்கலாம் அந்த அழகின் மீது கர்வம் இருக்கக்கூடாது. உன் அழகு இருக்கும்” உருவமே இல்லாமல் அரூபமாக போவாயாக! என சாபமிட்டார்.

இதை கேட்டு அதிர்ந்து லட்சுமி சாப விமோசனம் கேட்டார். அதற்கு விஷ்ணு “பூமியில் எங்கு ஒரு முறை தவம் செய்தால் ஒரு கோடி முறை தவம் செய்த பலன் கிடைக்குமோ, அங்கு தவம் செய்தால் உன் சாபம் விலகும் என கூறினார். சிவனின் கண்களை மூடி சாபம் பெற்ற பார்வதி தேவி காஞ்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரரை வணங்கி விமோசனம் பெற்றார். எனவே மகாலட்சுமி இத்தலம் வந்து தங்கி விஷ்ணுவை வணங்கி அரூப வடிவம் மாறி உருவம் பெற்றாள்.

தவத்தின் பயனாக முன்பை விட அழகு மிகுந்து. லட்சுமியை கள்ளத்தனமாக எட்டிப்பார்த்தார் பெருமாள் இதனால் இவருக்கு கள்ள பெருமாள் என பெயர் ஏற்பட்டது. இங்கு காமாட்சி அம்பாளே பிரதானம் என்பதால் அவருக்கு படைக்கப்படும் நிவேதனங்களை கள்வப்பெருமாளுக்கு படைக்கப்பட்டு. அதே பூஜைகளை இவருக்கும் செய்கிறார்கள்.

தசரதர் புத்திர பாக்கியம் வேண்டி யாகம் செய்யும் முன்பே, இங்கு உள்ள காமாட்சியும், பெருமாளையும் வணங்கியுள்ளார். தனது ராம அவதாரத்திற்கு தன்னிடமே வந்து தசரதரை வேண்ட செய்த பெருமாள் இவர். தங்கைக்கான கோயில் என்றாலும் அண்ணனுக்கு பணிந்து அவருக்கு கீழே அம்பாள் இருப்பதாக சொல்கிறார்கள். இதனால் மண்டபத்திற்குள் சென்று நிற்காமல் அமர்ந்தே தரிசிக்க வேண்டும்.

பொதுவாக மகாலட்சுமி நான்கு கரங்களுடன் வரம்தரும் கோலத்தில் இருப்பார். ஆனால் இங்கு இரண்டு கரங்களுடன் சுவாமியை வணங்கிய கோலத்தில் உள்ளார். தன் கர்வம் நீங்க பெற்றதால் லட்சுமி பணிவுடன் வணங்கியதாக சொல்லப்படுகிறது. இவர் பின்புறக் அடுத்த சுவரில் அரூப கோலத்திலுள்ள லட்சுமியை வணங்கி பின் சுவாமி, தாயாரை தரிசிக்கவேண்டும். அண்ணன் தங்கைகள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் அவர்களுக்குள் ஒற்றுமை கூடும் என்பது நம்பிக்கை.

Recent Post