சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கும் கல்யாண முருங்கை கீரை

பொதுவாக அனைத்து கீரைகளிலும் இல்லாத மருத்துவ குணம் இந்த கீரைகளில் உள்ளது. கிராமப்புரங்களில் வேலிகளில் வைத்து வளர்க்கிறார்கள். இது சுமார் 85 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் அகன்றும் பெரிதாகவும் இருக்கும். இதன் மலர்கள் அதிக சிவப்பாக இருக்கும். அந்த காலத்தில் பெண்கள் இதன் பழத்தை லிப்ஸ்டிக் போல் அவர்களுடைய உதட்டில் பொட்டுக்கொள்ளுவார்கள். மேலும் அந்த கீரைகளில் உள்ள மருத்துவ குணத்தை பற்றி தற்போது பார்ப்போம்.

கல்யாண முருங்கை இலை பயன்கள்

கல்யாண முருங்கை கீரை சாறில் சிறிதளவு மோர் கலந்து சாப்பிட்டால் அலர்ஜி மற்றும் உடல் எரிச்சல் குறையும்.

இக்கீரையில் சீரகம் மற்றும் நெல்லிசாறு ஆகியவற்றை கலந்து அதிகாலையில் தினமும் சாப்பிட்டால் பித்தம், மயக்கம், இரத்தம் அழுத்தம் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

கல்யாண முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் சளி மற்றும் கப நோய்கள் குணமாகும். மேலும் இக்கீரையுடன் ஊற வைத்த வெந்தயத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

இக்கீரையை கசாயமாக காய்ச்சி குடித்தால் சிறுநீர் சம்பந்தமான பிரச்சனை குணமாகும். மேலும் இக்கீரையுடன் ஓமம், இலவங்க பட்டை ஆகிய இரண்டையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும்.

பெண்கள் கல்யாண முருங்கை இலையை ஊற வைத்த கருப்பு எள்ளுடன் சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டால் மாதவிடாய் பிரச்சனை அனைத்தும் குணமாகும். மேலும் இக்கீரையுடன் பச்சரிசி அரைத்து சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

ஆண்மை குறைவு உள்ளவர்கள் இந்த கல்யாண முருங்கையுடன் கசகசா, உளுந்து, மாதுள பழச்சாறு ஆகியவற்றை அரைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும், காமம் அதிகரிக்கும்.

தோல் நோய் உள்ளவர்கள் இக்கீரையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் தோல் சம்பந்தமான சொறி, சிரங்கு ஆகிய நோய்கள் குணமாகும்.

இரத்த சோகை உள்ளவர்கள் இந்த இலையுடன் மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும்.

Recent Post

RELATED POST