தட்டாம் பயரில் உள்ள மருத்துவ குணங்கள்

காராமணி என்பது பயறு வகைகளை சேர்ந்தது. இதனை தட்டாம் பயறு என்று அழைப்பார்கள். இது வறண்ட நிலத்திலும் நன்றாக வளரும் தன்மை கொண்டது. இது உடலுக்கு அதிக ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது.

இந்தப் பயிரை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிடலாம். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவில் இந்த பயறு பயிரிடப்பட்டு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. தற்போது தெற்காசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக பயிர் செய்யப்பட்டு வருகிறது.

தட்டாம் பயறில் கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.

காராமணியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் சாப்பிடும் உணவுகள் நன்றாக செரிமானம் ஆகும். மேலும் மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

காராமணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. செல்களின் பாதிப்பு தடுக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இதிலுள்ள வைட்டமின் சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் தூங்குவதற்கு முன் காராமணியை சாப்பிட்டுவிட்டு படுத்தால் நல்ல தூக்கத்தை தரும்.

காராமணியில் உள்ள வைட்டமின் பி1 இதய நலத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து கொழுப்பு சேர விடாமல் தடுத்து தமனிகளில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காராமணியை தொடர்ந்து சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்து நல்ல செரிமானத்தை தூண்டும்.

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். இந்த பிரச்சனை வராமல் தடுக்க காராமணி சாப்பிடவேண்டும். இதிலுள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த சோகை வரவிடாமல் தடுக்கிறது.

காராமணியில் உள்ள கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் எலும்புகளுக்கு பலம் அளிக்கிறது.

Recent Post