இருமல் சளியை முழுவதுமாக விரட்டும் கற்பூரவள்ளி

மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி இலைகளை சாப்பிடுவதற்கு முன், அவற்றை நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். கற்பூரவள்ளி இலைகளை தினமும் உணவில் சேர்த்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இதனால் உடலை தாக்கும் நோய்களின் எண்ணிக்கை குறையும்.

கற்பூரவள்ளியில் வைட்டமின் கே அதிக அளவில் உள்ளது. இந்த வைட்டமின் கே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

கற்பூரவள்ளி முதுமையை தடுக்கும். பல சரும நோய்களை எதிர்க்கும் தன்மையை கொண்டுள்ளது.

Also Read : மழை காலத்தில் சளி பிடிக்காம இருக்கணுமா? இதை சாப்பிடுங்க..!!

கற்பூரவள்ளி இலைகளில் அதிக அளவில் டயட்டரி நார்ச்சத்து உள்ளது. இதனை தொடர்ந்து உணவில் சேர்த்தால், இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

சளி, காய்ச்சல், அடிவயிற்று வலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் கற்பூரவள்ளி இலையை பச்சையாக சாப்பிட்டால் உடனடி நிவாரணம் பெறலாம்.

கற்பூரவள்ளி இலைகளில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது, இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதயத்தின் துடிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

நெஞ்சு சளி பிரச்சனை உள்ளவர்கள் ஒரு டம்ளர் நீரில் கற்பூரவள்ளி எண்ணெய் 3 துளிகள் சேர்த்து குடிக்க வேண்டும். இதனை 4-5 நாட்கள் தொடர்ந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும், இது அஜீரண கோளாறுகளை சரி செய்யும்.

Also Read : மார்புச்சளியை நீக்கும் பனங்கற்கண்டு பால்

குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி ஏற்பட்டால் கற்பூரவல்லி இலைச்சாற்றில் சிறிது கல்கண்டு கலந்து கொடுக்கலாம்.

கற்பூரவள்ளி இலையை எண்ணெயில் பொரித்து அந்த எண்ணெயை தொண்டையில் தடவி வந்தால் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

கற்பூரவல்லி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் மூட்டுவலி படிப்படியாக குறையும். மேலும் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் சரியாகும்.

கற்பூரவல்லி இலைகளை வீட்டில் பரப்பி வைத்தால் கொசுக்கள் அண்டாமல் இருக்கும். தொற்றுகிருமிகளை அழிக்கும்.

Recent Post

RELATED POST