பனை கருப்பட்டி எவ்வளவு சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் வராது.பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பார்கள்.கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கிறது. சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். டீ, காபியில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தி வந்தால் எலும்புகளும், பற்களும் உறுதியாகும்.
பருவமடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெருவதுடன் கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
சர்க்கரை நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன், கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
கருப்பட்டியில் கால்சியம் சத்து உள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொடர்ந்து சாப்பிடலாம். சுக்கு காபியில் கருப்பட்டியை சேர்த்து குடிப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.