கருவாடு சிலருக்கு மிகவும் பிடித்தமான உணவாக உள்ளது. ஆனால் அதனை எல்லா உணவோடும் சேர்த்து சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்தும். உடலில் சில பிரச்சனை இருப்பவர்களும் சாப்பிட கூடாது.
கருவாடு, மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிட்ட பிறகு பால் மற்றும் தயிர், கீரை போன்ற உணவுகள் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலில் வெண் மேகம் போன்ற நோய்கள் உருவாகும். மேலும் புட் பாய்சன் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
கருவாடு சமையலின் போது அவற்றுடன் மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி சேர்த்து சமைக்க வேண்டும. இதனால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
யாரெல்லாம் கருவாடு சாப்பிடக் கூடாது?
சருமத்தில் அழற்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் கருவாடு சாப்பிட்டால் சருமத்தில் நமைச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் கருவாட்டை தொடவே கூடாது.
கருவாட்டில் உப்பு அதிகமாக இருக்கும். எனவே இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சேர்த்துக் கொள்ள கூடாது. மேலும் அப்பளம், ஊறுகாய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகள் சாப்பிட கூடாது. இதனால் சளி, இருமல், மூக்கடைப்பு, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.