கறிவேப்பிலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நம்மில் பல பேர் சாப்பிடும் பொழுது கருவேப்பிலை வந்தால் அதை எடுத்து ஓரமாக போட்டு விடுவோம். கருவேப்பிலை ஏதோ வாசனைக்காக தாளிப்பதற்காக பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்கு தெரிவதில்லை. இதை படித்து பாருங்கள் கறிவேப்பிலையை இனி தூக்கி எறிய மாட்டீர்கள்.

கருவேப்பிலை ஒரு பங்கு, சீரகம் கால் பங்கு, இரண்டையும் மை போல அரைத்து, வாயில் போட்டு வெந்நீரை குடிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனையும் பருக வேண்டும். இவ்வாறு மூன்று வேளைகள் செய்து வந்தால் வயிற்றுப் போக்கு அடங்கிவிடும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேற்றி தொப்பையை குறைக்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலையுடன் பேரிச்சம்பழம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரத்த சோகை பிரச்சனையை சரி செய்யும்.

சிலருக்கு நாக்கில் ருசி அறியும் தன்மை இருக்காது.அவ்வாறு உள்ளவர்கள் கருவேப்பிலை, சீரகம், இஞ்சி, சிறிதளவு பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு இவைகளை வைத்து மையாக அரைத்து, சுடு சாதத்தில் பிசைந்து ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் போதும். உங்கள் நாக்கிற்கு ருசி அறியும் தன்மை வந்துவிடும்.

கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ பயன்கள்

  • ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்.
  • எலும்பை உறுதிப்படுத்தும்.
  • குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும்.
  • காய்ச்சலைப் போக்கும்.
  • சீதபேதியை நிறுத்தும்.
  • கண் பார்வை தெளிவடையும்.
  • பசியை தூண்டி விடும்.
  • இளநரை மறையும்.
  • வாய்க்கசப்பைப் போக்கும்.
  • உடல் என்றும் இளமையுடன் இருக்கும்.
  • குழந்தைகளின் உடம்பை காக்கும்.
  • இரத்தம் சுத்தமாகும்.
  • பற்கள் உறுதிப்படும்.
  • தேகத்திற்கு சுறுசுறுப்பை தரும்.

100 கிராம் கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள்

  • நீர்    – 66%
  • கொழுப்பு  – 1%
  • மாவுச்சத்து   – 16%
  • சுண்ணாம்புச் சத்து  – 830 மி.கி
  • இரும்புச் சத்து  – 7 மி.கி
  • புரதச்சத்து  – 6 மி.கி
  • நியாசின்  – 2.2 மி.கி
  • வைட்டமின் சி  – 4 மி.கி

இவ்வளவு சத்துக்களையும், பயன்களையும் கொண்ட கருவேப்பிலையை, தூக்கி எறியாதீர்கள்.

Recent Post

RELATED POST