நம் உடலில் உள்ள உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பு சிறுநீரகமும் ஒன்று. இரு சிறுநீரகங்களும் சீராக இயங்கும்போது தான் நம் வாழ்க்கை சீராக இருக்கும். அதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நம் வாழ்க்கை மிகவும் சிரமமாகிவிடும்.
ஆகையால் மிகவும் முக்கியமான இந்த சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
தினசரி குறைந்தது 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இந்த 8 டம்ளர் தண்ணீர் சிறுநீரகம் சம்பந்தமான பல்வேறு நோய்களில் இது தடுக்கும்.
ஆஸ்பிரின், பாரசிட்டமால் போன்ற வலி நிவாரணி மருந்துகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த மாதிரியான மருந்துகள் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சிதைக்கும் தன்மை கொண்டவை.
நீண்ட நேரத்திற்கு சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்து கொண்டிருக்கக் கூடாது. குறைந்தது நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது சிறுநீர் வெளியேற்றுவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
டாக்டரை எப்போது அணுகலாம்?
சிறுநீரின் நிறம் வழக்கத்தை விட நிறம் மாறி இருந்தால் அதாவது அதிக மஞ்சள் நிறம் மஞ்சள் காமாலையை குறிக்கும். சிவப்பு கருஞ்சிவப்பு நிறமாக இருந்தால் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுவதை குறிக்கும். ஒயின் நிறத்தில் இருந்தால் ரத்த சிவப்பு அணுக்கள் அதிக அளவு செயலிழந்து இருப்பதை குறிக்கும்.
இடுப்பின் பின்புற கீழ்ப்பகுதியில் மந்தமான வலி ஏற்பட்டால் சிறுநீரகங்களில் கற்கள் அல்லது பாதிப்பு உருவாகியிருப்பதை இது குறிக்கும்.
நீர் கழிக்கும் போது பின்புற கீழ் இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டால் சிறுநீரக கோளாறு தீவிரமடைந்தது குறிக்கும்.
மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒன்று உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது தாராளமாக தண்ணீர் குடிப்பது. பிறகு அதற்கு உண்டான மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிக மிக நல்லது. ஆரம்ப காலகட்டத்தில் கண்டறிந்து அதனை குணப்படுத்தினால் நீண்ட நாட்கள் வாழ முடியும்.
அதற்காக சாதாரணமாக ஏற்படும் வலியினை சிறுநீரக நோய் என்று நினைத்து அச்சப்பட வேண்டாம். எதுவென்றாலும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டும்.