கிராம்பில் கார்போ ஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவித்து ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கிராம்புடன் சிறிது சமையல் உப்பு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு, தொண்டை எரிச்சல் குணமாகும்.
வெற்றிலையில் கிராம்பு, மிளகு சேர்த்து சாப்பிட்டு பிறகு மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.
கிராம்பு, மிளகு இரண்டையும் பொடி செய்து திராட்சை சாற்றில் கலந்து குடித்தால் சிறுநீரக கோளாறு நீங்கும்.
துளசி சாறுடன் தேன், கிராம்பு தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
கிராம்பு மற்றும் ஓமத்தை பொடி செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் வயிற்று போக்கு நிற்கும்.
பாலில் கிராம்பு பொடி, பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
பேருந்தில் பயணம் செய்யும் போது வாந்தி வருவது போல் தோன்றினால் கிராம்பை வாயில் போட்டு மென்று தின்றால் வாந்தி வருவதை கட்டுப்படுத்தலாம்.
கிராம்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயில் பஞ்சில் நனைத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் பல் வலி, பல் சொத்தை நீங்கும்.
நாம் சாப்பிடும் உணவுகளில் சிறிது கிராம்பு சேர்த்து வந்தால் சாப்பிட்ட உணவுகள் நன்கு ஜீரணமாகும். பசியை தூண்டும்.
வெதுவெதுப்பான நீரில் கிராம்பும் சிறிதளவு தேனும் கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை நீங்கும்.