கிராம்பில் வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, கார்போஹைட்ரேட் ஆகிய சத்துக்கள் உள்ளன.
உடல் பருமனை குறைக்கும் முக்கிய பண்புகள் கிராம்பில் அதிகம் உள்ளன. அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
ஒரு டம்ளர் நீரில் சிறிதளவு கிராம்பை போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வருவதால் கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டு வேகமாக எடை குறையத் தொடங்கும்.
Also Read : உடல் எடை கூடுவதற்கு இதுவும் காரணமா..? அதிர்ச்சி தகவல்..!
சூடான நீரில் கிராம்புகளை 5-10 நிமிடங்கள் போட்டு கொதிக்க வைத்து கிராம்பு தேநீர் தயார் செய்து குடிக்கலாம். இது செரிமானத்தை மேம்படுத்தவும், பசியை அடக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.