எல்லாவிதமான நோயையும் தடுக்கும் சக்தி கிவி பழத்திற்கு உண்டு. காரணம் இதில் அதிகமாக இருக்கும் வைட்டமின் சி சத்து தான். இதனை பசலிப்பழம் என்றும் அழைப்பார்கள். கிவிப் பழம் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கலந்தது.
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள பெர்ரி வகை பழங்கள் தான் கிவி பழங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இயற்கை அளிக்கும் அனைத்துவித பழங்களும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியதுதான். அவ்வாறு இங்கு கிவி பழம் தரும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
ஒரு கிவி பழத்தில், ஒரு நாள் முழுவதும் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து 120% உள்ளது. ஆரஞ்சு பழத்தை விட அதிகமாக இதில் உள்ளது.
கிவி பழத்தில் உள்ள சத்துக்கள்
கிவி பழத்தில் வைட்டமின் பி3, பி5, பி6, சி, ஈ, பீட்டா கரோட்டின், பயோட்டின், ஃபோலிக் அமிலம், லுட்டீன், கால்சியம், தாமிரம், அயோடின், இரும்பு, மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், துத்தநாகம், நார்சத்து, மாவு சத்து என 21 சத்துக்கள் இப்பழத்தில் அடங்கியுள்ளன.
விஷத்தை அகற்றும்
கிவி பழத்தில் உள்ள வைட்டமின் பி3 உடலில் தேவையற்று இருக்கும் விஷ பொருளை அகற்றுகிறது. இதனால் இளமையிலேயே முதுமை அடைவது தடுக்கிறது.
கண்பார்வை
கிவி பழத்தில் வைட்டமின் ஈ உள்ளது. இது கண்பார்வைக்கும் உடல் நலத்திற்கும் நல்லது. கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.
கல்லீரல் பாதுகாப்பு
கிவி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கும். கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் புண்களையும் ஆற்றும்.
உடல் எடை குறையும்
கிவி பழத்தில் நார்சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் சேரும் கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் நார்சத்து செரிமான கோளாறுகளையும் சரி செய்யும்.
கர்ப்பிணி பெண்களுக்கு
கிவி பழத்தில் போலிக் அமிலம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான சத்துக்கள் இந்த பழத்திலிருந்து கிடைக்கிறது.
தலை முடி பாதுகாப்பு
பொடுகு, இளநரை, தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின் “எ” மற்றும் “ஈ” சத்துக்கள் தலைமுடி உதிர்வதை தடுத்து தலைமுடிக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
கிவி பழம் மிகவும் சுவையானதாக இல்லாவிட்டாலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. எனவே அதனை அடிக்கடி சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.